தமிழகத்தில் அமைய உள்ள 4வது புதிய துறைமுகத்தால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஓய்வுப்பெற்ற நீதிபதி ஹரிபரந்தாரன் தெரிவித்துள்ளார்.
சென்னையில், பழவேற்காடு லைட் ஹவுஸ் பகுதி மீனவர் சங்கம், பழவை பெண்கள் மீன் தொழிலாளர் சங்கம், பூவுலகின் நண்பர்கள், ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன் உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஓய்வு பெற்ற நீதிபதி ஹரிபரந்தாமன், ”சென்னை அருகே காட்டுப்பள்ளியில்அதானி அமைக்கும் புதிய துறைமுகத்தால் மீனவர்கள், பொதுமக்கள் செய்து வரும் தொழில்கள் முடங்கியுள்ளன. இதனால் வேலைவாய்ப்புகளை அப்பகுதி மக்களும், மீனவர்களும் இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஆறு, ஏரி, குளங்கள், போன்ற இயற்கை வளங்கள் முற்றிலுமாக அழியும் வாய்ப்பு இதன் காரணமாக உள்ளது. ஏற்கனவே 3 துறைமுகங்கள் உள்ள நிலையில் 4வது துறைமுகம் அவசியம் தேவையா ? என்பதை அரசு ஆராய்ந்து, முடிவெடுக்கவேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.