டில்லி

முத்தலாக் சட்டத்தை அதிமுகவினர்  எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி டிவிட் பதிவிட்டு உள்ளார்.

இஸ்லாமிய பெண்கள் திருமண உரிமைகளை பாதுகாக்கும் வகையில் மத்திய அரசு முத்தலாக் மசோதாவை நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதா மீது மக்களவையில் நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று பேசிய அதிமுக எம்.பி ரவீந்திரநாத், மசோதாவுக்கு ஆதரவாக பேசினார்.

ஆனால், மாநிலங்களவையில் அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்து பேசியது. ஆனால், வாக்கெடுப் பின்போது, எதிர்த்து வாக்களிக்காமல், அவையில் இருந்து வெளிநடப்பு செய்து, மறைமுகமாக பாஜகவுக்கு ஆதரவு அளித்தது.

அதிமுகவின் நடவடிக்கை எதிர்க்கட்சிகளால் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளான நிலையில்,  முன்னள் மத்தியஅமைச்சர் ப.சிதம்பரம், முத்தலாக் மசோதா பற்றி டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

அதில்,  மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை! மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை!

‘‘முத்தலாக் தண்டனைச் சட்ட மசோதா செல்லாது என்று மிக விளக்கமாக மாநிலங்கள் அவையில் அஇஅதிமுக தலைவர் உரையாற்றினார். அவை உறுப்பினர்கள் அவரது உரையைப் பாராட்டினார்கள்.

மசோதாவின் மீது வாக்கெடுப்பு, அஇஅதிமுக உறுப்பினர்கள் யாரும் அவையில் இல்லை. மசோதாவை அஇஅதிமுக கட்சியினர் எதிர்த்தார்களா, ஆதரித்தார்களா என்பது விடுகதை’’ எனக் கூறினார்.