சென்னை: உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.டி.செல்வம் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார்.

காவலர் – பொதுமக்களுக்கிடையேயான உறவை மேம்படுத்தவும், காவல்துறை பணியாளர்களுக்கு நலத்திட்டங்களைச் செயல்படுத்திடவும், புதிய பயிற்சி முறைகளைப் பரிந்துரைத்திடவும் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் திரு. சி.டி. செல்வம் அவர்கள் தலைமையில் புதிய காவல் ஆணையம் அமைத்திட தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  புதிய காவல் ஆணையத்தில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் .சி.டி செல்வம் அவர்களைத் தலைவராகவும்.  ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாலி கா. அலாவுதீன்,  முனைவர் திரு.கே இராதாகிருஷ்ணன் (ஐபிஎஸ் அதிகாரி, ஒய்வு),  மனநல மருத்துவர் சி.இராம சுப்பிரமணியம், முன்னாள் பேராசிரியர் முனைவர் திருமதி நளினி ராவ் ஆகியோரை உறுப்பினர்களாகவும், காவல் துறை குற்றப்புலனாய்வு) கூடுதல் இயக்குநர்  மகேஷ்குமார் அகர்வால்  உறுப்பினர்-செயலராகவும் நியமனம் செய்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

உத்தரவிட்டுள்ளார்.