புதிய பாஸ்போர்ட்: நித்தியானந்தாவின் விண்ணப்பம் நிராகரிப்பு, வெளியறவுத்துறை தகவல்

Must read

டெல்லி: புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நித்தியானந்தாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வெளியறவுத்துறை தெரிவித்துள்ளது.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளாகி இருக்கும் நித்தியானந்தா தலைமறைவாக உள்ளார். ஈக்குவடாரில் கைலாச நாட்டை அமைத்துள்ளதாக அறிவித்தார்.

ஆனால் அதை அந்நாடு மறுத்திருக்கிறது. இப்போது அவர் எங்கு உள்ளார் என்று தெரியவில்லை. இந் நிலையில், புதிய பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நித்தியானந்தாவின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாக வெளியறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ரவிஷ் குமார் கூறி இருப்பதாவது: நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.

புது பாஸ்போர்ட்டுக்கு அவர் விண்ணப்பித்தார். அதையும் நிறுத்தி வைத்துள்ளோம். போலிஸ் அனுமதியின்றி அவர் பாஸ்போர்ட் பெற முடியாது. அவரை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.

 

More articles

Latest article