டில்லி,
தமிழகம் உள்பட 5 மாநிலங்களுக்கு விரைவில் கவர்னர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் கவர்னராக இருந்த ரோசையா கடந்த வருடம் ஆகஸ்டு 31ந்தேதி ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தமிழக தற்காலிக கவர்னராக மகராஷ்டிரா கவர்னர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தை கூடுதலாக கவனிப்பார் என்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டிருந்தார்.
கடந்த 6 மாதங்களுக்கும் மேலக தமிழகம் கவர்னர் இல்லாமலேயே செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமனம் செய்ய மத்திய உள்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், குஜராத் மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் புதிய ஆளுநர்களுக்கான இடங்கள் இதுவரை நிரப்பப்படமலால் உள்ளது.
குடியரசு தலைவர் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற இருப்பதால், தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு விரைவில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்