சென்னை

ன்று தென் மேற்கு வங்கக்கடலில் புதிய தாழ்வுப்பகுதி உருவாகும் என வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தொடர்ந்து அடுத்தடுத்து காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது.  இந்த முறை எதிர்பார்ப்பை விட அதிகமாக வடகிழக்கு  பருவமழை பெய்துள்ளது. தமிழகத்தை இதுவரை 2 காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் தாக்கி உள்ளன.

இதனால் தமிழகம் மிகவும் கனமழையை எதிர்கொள்ள நேர்ந்தது.  சென்னை வானிலை மையம் இன்று தென் மேற்கு வங்கக் கடலில் புது தாழ்வுப்பகுதி உருவாகும் என எச்சரித்துள்ளது.  இதனால் வடகிழக்கு  பரவக்காற்று வேகமாக வீசக்கூடும் எனவும் காற்றின் வேகம் 50 கிமீ வரை செல்லலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம்,

‘இந்த புதிய தாழ்வுப்பகுதியால் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்.   இது இன்றிலிருந்து தீவிரமாகலாம்,  மேலும் இன்றும் நாளையும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.  தென் கடலோர மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்ய வாய்ப்புள்ளது. குமரிக்கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்”

என எச்சரித்துள்ளது.