சென்னை: வங்கக்கடலில் உருவாகி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 3 நாட்களுக்கு தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால், 3ந்தேதி (நாளை மறுதினம்) தமிழக கடலோர பகுதிகள் மற்றும் 1ந்தேதி, 2ந்தேதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை அடுத்த 28மணி நேரத்திற்கு வாகனம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் என்றும் தெரிவித்துள்ளது.
தென்கடலோர மாவட்டங்கள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், ராமநாதபுரம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் நாளை மிதமான மழையும், நாளை மறுநாள் 3 ந்தேதி கனமழையும் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 ஆம் தேதி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் கனமழையும், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு மன்னார் வளைகுடா மற்றும் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசும் என்பதால் 3,5 ஆம் தேதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.