தூத்துக்குடி:
சிகலா புஷ்பா எம்.பி., சாதி பெயரைச்சொல்லி திட்டியதாக சாத்தான்குளம் டி.எஸ்.பி. அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
டில்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை அடித்து சர்ச்சையில் சிக்கிய சசிகலா புஷ்பா, அடுத்த அதிரடியாக முதல்வர் ஜெயலலிதா தம்மை அடித்ததாக ராஜ்யசபாவில் கூறி பெரும்  அதிர்வலையை ஏற்படுத்தினார். இதையடுத்து  அவர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் எம்.பி. பதவியை ராஜினாமா  செய்யப்போவதில்லை என்று சசிகலா புஷ்பா அறிவித்தார்.
a
இதற்குப் பிறகு, சசிகலா புஷ்பா மீது தொடர்ந்து பல புகார்கள்  எழுந்தன. நெல்லையைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், சசிகலா புஷ்பா, 20 லட்ச ரூபாய் மோசடி  செய்துவிட்டதாக காவல்துறையில் புகார் கொடுத்தார். பிறகு சசிகலா புஷ்பாவின் து வீட்டில் வேலைபார்த்த பானுமதி என்பவர் தனது சகோதரி ஜான்சிராணியுடன் சேர்ந்து தூத்துக்குடி எஸ்பி அலுவலக்தில் பாலியல் புகார்  அளித்தார்.
இந்நிலையில் சசிகலா புஷ்பா மீது புதிய புகார் அளிக்கப்பட்டுள்ளது. ,தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் அருகில் உள்ள நொச்சிக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசிவிஸ்வநாதன். கட்டிட தொழிலாளி. இவர்,  சாத்தான்குளம் டி.எஸ்.பி. கண்ணனிடம் இன்று இரவு சுமார் 10 மணி அளவில் சசிகலா புஷ்பா எம்.பி. மீது புகார் கொடுத்திருக்கிறார்.
அதில், “சசிகலா புஷ்பாவும், அவரது தந்தை தியாகராஜனும் நவ்வலடி கிராமத்தில் அய்யா கோவில் கட்டுவதற்காக சில வருடங்களுக்கு முன்பு என்னிடம் வந்தார்கள்.  , அதற்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் தொகையாக நிர்ணயம் செய்தார்கள். நான் அந்த வேலையை முடித்துக் கொடுத்தேன். ஆனால் அவர்கள், எனக்கு 20 ஆயிரம் மட்டுமே தந்தவர்கள், மீதம் உள்ள ரூ.2 லட்சத்து 30 ஆயிரம் தரவில்லை.
பணத்தைக் கேட்டதற்கு, என்னுடையை தம்பியின் ஆட்டோவை பறித்து வைத்துக்கொண்டார்கள். அதை நான் கேட்டபோது, உன்னை தொலைத்துவிடுவேன் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார்கள்.  சாதி பெயரைச் சொல்லியும் திட்டினார்கள்.எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனக்கு வரவேண்டிய பாக்கி பணத்தையும் மீட்டுத்தரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார்.