கர்நாடகா அரசு மீது  புதிய வழக்கு: 2  நாளில் தாக்கல்! முதல்வர் அறிவிப்பு!!

Must read

சென்னை:
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தல் புதிய வழக்கு தொடரப்பட்டும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றைய கேள்வி நேரத்தின்போது சட்டசபை எதிர்க்கட்சி துணைத்லைவர் துரைமுருகன் கர்நாடகா, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்போவதாக அறிவித்து உள்ளது பற்றி பேசினார்.
அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர்,  மேகதாது அணை பிரச்சினையில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட ஜெயலலிதா சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுப்பார் என்று சட்டசபையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.
dc-Cover-20160124063256.Medi
இதையடுத்து, இன்று சட்டசபையில் விதிஎண் 110-ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா ஒரு அறிக்கை படித்தார். அதன் விவரம் வருமாறு:
மேலும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி 2013ல் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் காவிரி வழக்கில் தன்னையும் தமிழக அரசு இணைத்துள்ளது.
2007 இறுதி ஆணையை மத்திய அரசு அரசிதழில் வெளியிடவில்லை. காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைபடுத்துதல் குழுவை மத்திய அரசு அமைக்கவில்லை.
ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்திற்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. இதனால் கர்நாடகா அரசுக்கு எதிராக 2 நாளில் வழக்கு தொடரப்படும் என்றார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article