
சென்னை,
அதிமுக அணிகள் இணைந்தை தொடர்ந்து புதிய அமைச்சர்களாக ஓபிஎஸ் மற்றும் மா.பா. பாண்டியராஜன் பதவி ஏற்றனர்.
மேலும் ஒருசில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டுள்ளனர்.
கவர்னர் வித்யாசாகர் ராவ் துணைமுதல்வராக ஓபிஎஸ்-க்கும், அமைச்சராக மா.பா.பாண்டிய ராஜனுக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து அவர்கள் கோட்டைக்கு வந்து தங்களது அலுவலக பதவிகளை ஏற்கின்றனர்.
அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் புதிய அமைச்சரவை கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தில் ஏற்கனவே உள்ள 31 அமைச்சர்களுடன் ஓபிஎஸ், மா.பா.பாண்டியராஜனும் கலந்துகொள்வார்கள்.
இந்த கூட்டத்தில், நாளை சுப்ரீம் கோர்ட்டில் வர இருக்கும் நீட் தேர்வு வழக்கு குறித்தும், இரட்டைஇலையை மீட்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.
[youtube-feed feed=1]