சென்னை:

யிலில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் வகையில் புதிய மொபைல் செயலியை இந்திய ரயில்வே வாரியம் அறிமுகப்படுத்த உள்ளது.

இதன் காரணமாக, வரிசையில் கால்கடுக்க  நின்று டிக்கெட் பெறுவது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசி நேரத்தில் ரயிலை பிடிக்க வரும் பயணிகள், முன்பதிவு பெட்டியில் ஏறி பயணிப்பது காரணமாக பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது.

இதுபோன்ற மோதல் சூழ்நிலையை தவிர்க்கும் வகையில், மொபைல் செயலி (app) மூலம் டிக்கெட்டை பதிவு செய்து விட்டு, பயணத்தை தொடரும் வகையில் புதிய செயலியை இந்திய ரயில்வே ஒரு வார காலத்திற்குள் அறிமுகப்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது.

இதன் காரணமாக பயணிகளின் பதற்றம் குறையும் என்றும்,  முன்பதிவு இல்லாத டிக்கெட்டை ரெயில் நிலையங்களில் கால்கடுக்க வரிசையில் நின்று எடுக்கும் நிலை தவிர்க்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டை மொபைல் செயலி மூலமாகவே  பெற்று பயணிக்கும் புதிய வசதி இவ்வார இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாகவும், இவ்வாறு  முன்பதிவு செய்யும்போது, டிக்கெட்டை பிரின்ட் எடுக்க வேண்டிய அவசியமும் இருக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய செயலி ரயில் பயணிகளின் பயணத்துக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.