டில்லி

ருத்துவ மேல் படிப்பு இடங்களை பதிவு செய்து விட்டு அதில் சேராத மாணவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மருத்துவக் கல்வி மாணவர்கள் மருத்துவ மேற்படிப்பு கல்வி பயில பல கல்லூரிகளில் விண்ணப்பம் செய்கின்றனர்.   அவர்களுக்கு முதலில் இடம் ஒதுக்கப்பட்ட இடத்தில் பதிவு செய்து விடுகின்றனர்.    மாணவர்களுக்கு பிறகு அவர்கள் விரும்பிய கல்லூரியில் அதற்குப் பின் இடம் கிடைத்தால் இந்த பதிவு செய்த கல்லூரியில் சேராமல் விட்டு விடுகின்றனர்.   இதனால் அந்த பதிவு செய்யப் பட்ட இடங்கள் நிரப்பப் படாமல் அந்த கல்வியாண்டு முழுவதும் காலியாக இருக்கின்றன.

மாணவர்களின் இந்தப் போக்கினால் கடைசி நிமிடத்தில் மற்ற மாணவர்களுக்கு அந்த இடங்கள் ஒதுக்கப்பட முடிவதில்லை.    அதனால் தேவைப் படும் மாணவர்களுக்கு இடம் கிடைப்பதில்லை.   அத்துடன் அந்த இடங்கள் நிரப்பப் படாமல் உள்ளதால் சம்பந்தப் பட்ட கல்லூரிகளுக்கு கட்டண இழப்பும் உண்டாகிறது.

அதைஒட்டி மருத்துவக் கல்வி கவுன்சில் அறிவிப்பு ஒன்றை வெளியுட்டுள்ளது.   அதில், “கடந்த 2000 ஆண்டின் மருத்துவக் கல்வி விதிகளின்படி முதல் கட்ட கலந்தாய்வில் இடம் பெறும் மாணவர்கள் ரூ,25000 பதிவுக்கட்டணம் செலுத்த வேண்டும்.   இரண்டாம் கட்ட கலந்தாய்வு முடிந்த பின் அவர்கள் அந்த இடத்தில் சேரவில்லை எனில் அந்தப் பணம் திருப்பி அளிக்கப்படும்.

தற்போது அந்த விதி மாற்றப்படுகிறது.   முதல் கட்ட கலந்தாய்வில் பதிவு செய்த இடங்களில் மாணவர்கள் சேரவில்லை எனில் பதிவுக் கட்டணம் திருப்பித் தரப்பட மாட்டாது.   அவ்வாறு சேராத மாணவர்களுக்கு அபராதத் தொகையாக அந்தப் பணம் எடுத்துக் கொள்ளப்படும்”  என அறிவித்துள்ளது.