புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் வெளியிடப்படும்! ரிசர்வ் வங்கி

Must read

 
டில்லி,
புதிய 50 ரூபாய் நோட்டுகள் விரைவில் புழக்கத்திற்கு வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கைக்காகவும், கள்ளப்பணத்தை கட்டுப்படுத்துவதாகவும்,, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு  நவ.,8ம் தேதி அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகளை வெளியிட்டது.

மத்திய அரசின்  இந்த திடீர் அறிவிப்பால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.  இதற்கிடையே ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. புதிய 50, 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடுவது தொடர்பான அறிக்கை விரைவில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகின.
புதிய 50 ரூபாய் இந்நிலையில் விரைவில் புதிய 50 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்து உள்ளது.
இப்புதிய 50 ரூபாய் நோட்டுகள் ‘L’ வரிசையில், ரிசர்வ் வங்கி கவர்னர் உர்ஜித் படேல் கையெழுத்துடன் வெளியாகும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

More articles

Latest article