சென்னை,
மிழகத்தில் நடந்து முடிந்த 3 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 136ஆக உயர்ந்துள்ளது.
இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற 3 எம்எல்ஏக்களும், நாளை பதவியேற்கிறார்கள். இதன் மூலம் சட்டமன்றத்தில் அதிமுகவின் பலம் 136 பேராக உயர்ந்துள்ளது.
கடந்த மே மாதம் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. அப்போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கூறி தஞ்சை, அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டது. அந்த இரண்டு தொகுதியை தவிர்த்து ஏனைய தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி, ஏ.கே.போஸ்
அதிமுக வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி,ரெங்கசாமி, ஏ.கே.போஸ்

திருபரங்குன்றம் தொகுதியில் வெற்றிபெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல், பதவி ஏற்கும் முன்னரே உடல்நிலை பாதிப்படைந்து மரணத்தை தழுவினார். இதன் காரணமாக அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.
இதன் காரணமாக தேர்தல் தள்ளிவைக்கப்பட்ட தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய இரண்டு தொகுதிகள் மற்றும் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதி ஆகிய 3 தொகுதிகளுக்கு கடந்த 19ந் தேதி தேர்தல் நடைபெற்று நேற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இடைத்தேர்தல் நடைபெற்ற 3 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றனர்.
அரவக்குறிச்சி தொகுதியில் அ.தி.மு.கவை சேர்ந்த செந்தில்பாலாஜியும்,   தஞ்சை தொகுதியில் அ.தி.மு.கவை சேர்ந்த  ரெங்கசாமியும்,   திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் ஏ.கே.போஸ்சும் வெற்றி பெற்றனர்.
இதை தொடர்ந்து சட்டசபையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 136 ஆக உயர்ந்து உள்ளது.
வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர்கள் 3 பேருக்கும், சபாநாயகர் நாளை பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். அதன்பிறகே அவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக  செயல்படுவார்கள்.