துரையைச் சேர்ந்த எல்.எம். சூரியபிரகாஷ் கடந்த 3ம் தேதி ஞாயிற்றுக் கிழமை மரணமடைந்தார்.

“நாற்பத்தி நான்கே வயதான இவர், மாரடைப்பால் மரணமடைந்தார். இதற்குக் காரணம், கடந்த பத்து மாதங்களாக பேலியோ உணவு முறையை பின்பற்றி வந்ததுதான். இந்த உணவு முறையால் உடலில் கொழுப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டு சூரி பிரகாஷ் மரணமடைந்துவிட்டார்” என்று பலரும் முகநூலில் பதிவிட்டு வருகிறார்கள்.

சூரிய பிரகாஷ், முகநூலில் செயல்படும் பேலியோ குழுவின் மூலம் ஆலோசனை பெற்று பேலியோ உணவு முறையை பின்பற்றி வந்தவர். தவிர, தனது முகநூல் பக்கத்தில், தான் பின்பற்றும் பேலியோ உணவு முறை பற்றி அவ்வப்போது சிறப்பாக எழுதி வந்தவர்.

“கடந்த பாத்து மாதங்களாக பேலியோ டயட்டில் இருந்தார் சூரிய பிரகாஷ். இதனால் உடலில் கொழுப்பு அதிகம் சேர்ந்து மாரடைப்பு ஏற்பட்டு இறந்துவிட்டார். ஆகவே பேலியோ டயட் ஆபத்தானது” என்று பலரும் பதிவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.

முகமது சாஜித் (Mohamed Sajith Fastersms) என்பவர், “மதுரையைச் சேர்ந்த சூர்யா  என்பவர் 10    மாதமாக   பேலியோ டயட்டில் இருந்ததால் மாரடைப்பில் மரணமடைந்துள்ளார். பேலியோ இருப்பவர்கள் எச்சரிக்கையாக  இருக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

வரதராஜ் கிருஷ்ணசாமி என்பவர், “பேலியோ டயட் வேண்டாமென கடந்த வருடம் சில பதிவுகள் பதிந்திருந்தேன்.
இன்று மற்றொரு மரணம் நிகழ்ந்துவிட்டது” என்று பதிவிட்டிருக்கிறார்.

இப்படி பலரும் பதிவிட்டு நெட்டிசன்களை அதிர்ச்சி அடையை வைத்திருக்கிறார்கள்.

அதே நேரம், பேலியோவினால் இந்த மரணம் ஏற்படவில்லை என்கிற பதிவுகளையும் காண முடிகிறது.

கே.எஸ். சுரேஷ்குமார் என்பவர் பதிவைப் படித்துப் பாருங்கள்:

“யோகாசன மேதை என புகழப்பட்ட கே.என்.குமாரசாமி இளம் வயதிலேயே மரணமடைந்தார். இதுகுறித்து பிரபல யோகா பயிற்சியாளரும் யோகசாஸ்திர முன்னோடியுமான டி.கிருஷ்ணமாச்சார் அவர்களின் மகன் தேசிகாச்சாரிடம் கேள்வியெழுப்பியபோது அவர் “முதலில் எந்த சாஸ்திரத்திலும் யோகாவினால் ஆயுள் நிர்ணயிக்கப் படுவதாக குறிப்பிடவில்லை, ஆயுள் சிருஷ்டிகர்த்தாவால் நிர்ணயிக்கப்படுகிறது. யோகிகளான ஆதிசங்கரர் 32 வயதுவரை, நம்மாழ்வார் 16 வயதுவரை தான் வாழ்ந்தனர்” என்று சொல்லியிருக்கிறார்.
ஆக ஒருவரின் மரணத்திற்கு பல காரணங்கள் உண்டு. தவறான உணவுப் பழக்கத்தால், வாழ்வியல் முறைகளால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டிருந்தால் அதை முற்றிலும் குணப்படுத்திவிடமுடியும் என உத்தரவாதம் தரமுடியாது.

கே.எஸ். சுரேஷ்குமார்

பேலியோ உணவு முறைக்கு மாறின மதுரை சூர்யா மருது, அதற்குமுன் 110 கிலோ எடையுடனும் சராசரி சர்க்கரையின் அளவு 8 மிகிவுக்கும் மேலே இருந்திருக்கிறது. கடந்த பத்து மாதங்களில் கவனிக்கத்தக்க உடல் மாற்றத்தையும் பெற்றிருக்கிறார். இப்போது அவர் இறப்பிற்கு பேலியோதான் காரணம் என திடீர் விஞ்”சாணிகள்” பரப்புரை செய்துவருகின்றனர். முற்றிலும் தவறான பரப்புரை அது. கடந்த 4 வருடங்களுக்கு முன் மதுவால் என் உடல் 77 கிலோ வரை இருந்தது. விட்டொழித்தபின் ஏற்பட்ட உடல் உபாதைகளுக்கு மருத்துவம் தீர்வாக அமையவில்லை.2014ம் வருடம் சிவராம் ஜெகதீசன் அவர்களின் ஆலோசனையின் பேரில் பேலியோஉணவு முறைக்கு மாறிய பின் உடல் எடை 68 எனவும், பல உடல் சிக்கல்கள் தீர்ந்து நிம்மதியான உறக்கமும், பழைய உடல் கூற்றுடன் ஆரோக்கியமாக் இருக்கிறேன்.

ஆகவே எவர் கூற்றையும் பரப்புரையையும் நம்பாதீர்கள்.

பேலியோ ஒரு அற்புத உணவு முறை. இது கடல். என்னைப் போல் நிறைய மீன்கள் உற்சாகமாக நீந்துகின்றனர்” என்று பதிவிட்டுள்ளார்.

பேலியோ முன்னோடியான சங்கரை தொடர்புகொண்டு பேசினோம். அவர், “நான் நான்கு வருடங்களாக பேலியோ உணவு முறையை பின்பற்றி வருகிறேன். என்னைப்போல் லட்சக்கணக்கானவர்கள் இந்த உணவு முறையை பின்பற்றி வருகிறார்கள்.

ஒரு விசயத்தைப் புரிந்துகொள்ளுங்கள்.

மாரடைப்புக்கும் கொழுப்புக்கும் தொடர்பே கிடையாது.

தவிர, பேலியோ டயட்டை பின்பற்றிய சூரிய பிரகாஷூக்கு மாரடைப்பு ஏற்பட்ட  அதே நேரத்தில்.. இந்த உணவு முறையை பின்பற்றாத ஆயிரமாயிரம் பேருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கும்.

அதாவது மாரடைப்பு  என்பது சைவம் –  அசைவம் என இருவேறு உணவு முறையை பின்பற்றுபவர்களுக்கும் வருகிறது.   புகை, மது பழக்கம் உள்ளவர்களுக்கும் வருகிறது, இல்லாதவர்களுக்கும் வருகிறது.

கே.எஸ். சரவணன்

தவிர, ஹார்ட் அட்டாக்கில் பல விதங்கள் உண்டு. ரத்த அழுத்தம், டயபாடிக், ட்ரஸ்ட் என்று பல காரணங்களால் மாரடைப்பு ஏற்படும். மற்றபடி குறிப்பிட்ட காரணத்தை எந்த வைத்திய முறையிலும் சொல்ல முடியாது” என்றார்.

மருத்துவர் கே.எஸ். சரவணனும் இதே கருத்தைச் சொல்கிறார்.

மேலும் அவர், “என் பேஷண்ட்கள் இருவர் பேலியோ உணவு முறையை பின்பற்றி வருகிறார்கள். அவர்களுக்கு முன்பைவிட உடல் இளைத்து, ட்ரிம்மாக ஆகிவிட்டார்கள்.  தவிர அவர்களுக்கு சுகர் குறைந்துள்ளது.

தவிர, பேலியோ உணவால் ஹார்ட் அட்டாக் வந்தது என்பது உறுதிப்படுத்தப்படாத தகவல்தான்.

ஹார்ட் அட்டாக் ஏற்பட பலகாரணங்கள் உண்டு” என்றார்.

ஆக, “பேலியோவால் ஹார்ட் அட்டாக் ஏற்பட்டது” என்பதை நம்ப வேண்டாம், நண்பர்களே!