சென்னை

மு க ஸ்டாலின் மகன் உதயநிதி காவிரிப் போராட்டத்தில் முன்னிலைப்படுத்துவதற்கு நெட்டிசன் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக மு க ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் அனைத்துப் போராட்டங்களிலும் முன்னிலைப் படுத்தப் படுகிறார்.   சமீபத்தில் மூன்றாம் கலைஞரே என வெளியிடப்பட்ட அவரது ஒரு புகைப்படம் சமூக தளங்களில் சர்ச்சைக்குள்ளாகியது.

தற்போது நடந்து வரும் காவிரி விவகாரப் போராட்டத்திலும்  உதயநிதி முன்னிலைப் படுத்துவதாக நெட்டிசன்கள் பதிந்து வருகின்றனர்.   ராதாகிருஷ்ணன் என்பவர் தனது டிவிட்டர் பக்கத்தில், “உதயநிதி ஸ்டாலின் அவர்களே, நீங்கள் கடும் உழைப்பு, தியாகம், மற்றும் அர்ப்பணிப்புக்குப் பின் இந்த இடத்துக்கு வர வேண்டும்.   மு க ஸ்டாலின் அவர்களே,  காவிரி மேலாண்மை வாரிய போராட்டத்தை உங்கள் குடும்ப போராட்டம் ஆக்க வேண்டாம்.    நாங்கள் எடுக்க வேண்டிய முடிவை நீங்கள் எடுத்துள்ளீர்கள்.  வருத்தம்” என பதிந்துள்ளார்.

இதற்கு உதயநிதி, “கவலைப்பட வேண்டாம் சார்! என உயரம் கழக தோழர்களுக்கும் தெரியும்,   எனக்கும் தெரியும்” என பதில் அளித்துள்ளார்.