அரபிக் கடலில் உருவான டவ்-தே புயலால் கடந்த 17ஆம் தேதி அன்று, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது.

புயல் கரையைக் கடந்தபோது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா கடலோர மாவட்டங்களில் சூறாவளி காற்றுடன் கடுமையான மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில், டவ் தே புயலால் வேரோடு சாய்ந்த மரங்களுக்கு மத்தியில் நடனமாடி வீடியோ ஒன்றை தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை தீபிகா சிங் .

மேலும், அந்த மரங்களுக்கு இடையே ஃபோட்டோ ஷூட் நடத்தி சில புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். நடிகை தீபிகா சிங்கின் இந்தப் பதிவிற்கு தற்போது எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன.

புயல் காரணமாக உயிர் சேதங்களும் பொருட்சேதங்களும் கடுமையாக ஏற்பட்டிருக்கும் இந்தச் சூழலில், இதுபோன்ற ஃபோட்டோ ஷூட் தேவையா என நடிகை தீபிகா சிங்கை சமூக வலைதளவாசிகள் கடுமையாக விமர்சித்துவருகின்றனர்.