நெட்டிசன்
ஆண்களை மட்டுமே பாலியல் குற்றவாளி என சொல்லும் அனைவரிடம் ஒரு கேள்வி?
ஆண் பெண் எதிர்பாலினம் என அனைவருக்கும் தெரிந்தும் ஒரு ஆணிடம் என் அங்கங்களை அப்படி தான் காட்டுவேன் உங்கள் அக்கா தங்கை தாய் என்றால் அப்படி தான் செக்ஸியாக பார்ப்பார்களா என்று கேட்கும் பெண்கள் அனைவரிடம் ஒரு கேள்வி?
ஒரு ஆண் மகன் தாய் தனது பெண் உறுப்பின் வழியாக ஈன்றெடுத்த தனது மார்பில் பால் கொடுத்து வளர்த்தாலும். அவனுக்கு விபரம் தெரிந்த பிறகு அந்த மகனின் முன்பே ஆடையில்லாமல் நடமாட முடியுமா? தான் தூக்கி வளர்த்த பெண் என்றாலும் தந்தை முன் பெண் பிள்ளைகள் ஆடையின்றி உலா வர முடியுமா?
பெற்ற பிள்ளைகள் என்றாலும் உடன் பிறப்புகள் என்றாலும் பாலுணர்வு அனைவருக்கும் ஒன்று தான். எனவே தான் ஒரு வயதிற்கு மேல் வளர்ந்த பெண் பிள்ளைகளுக்கு அந்த காலத்தில் தாவணி என்ற ஒரு கலாசாரத்தை கொண்டு வந்தார்கள்.
இன்று பெண் சுதந்திரம் என்ற பெயரில் பெண்கள் தனது அங்கங்களை கவர்ச்சி பொருளாக்கி கடை விரித்து காட்டுவது சினிமாவில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவ மாணவிகளிடம் காதல் உணர்வை தூண்டும் வகையில் கவர்ச்சியான ஆடை அலங்காரத்தில் அங்கங்களை பிரதிபலிக்கும் வகையில் காமத்தை தூண்டுவது நாம் தெய்வமென வணங்கும் ஆசிரியர் ஆசிரியைகளை காதலிப்பதாக காட்டி ஆன்டி அங்கிள் ஆபாசமாக சித்தரிப்பு செய்வது இப்படி எல்லா விசயத்திலும் ஒவ்வொரு நொடியும் பாலுணர்வை தூண்டி விட்டு ஆண்களை மிருமாக்கி இந்த சமூகம் குளிர் காய்கிறது.
தன் உணர்ச்சிகளை அடக்கும் ஆண்கள் தப்பித்து கொள்கிறார்கள்.
தனது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் தான் தோன்றித் தனமாக வாழும் ஆண்கள் இதில் மாட்டிக் கொண்டு அசிங்கப் படுகிறார்கள்.

ஒட்டு மொத்த குடும்பமும் அவமானத்தை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. 😥
சமூக நலன் கருதி மக்களின் குரலாய் நான் 🙏🙏