யானைகளின் தொடர் பலி – நெட்டிசனின் யோசனை
யானைகள் பலி.. இதையாவது செய்து பார்க்கலாமே. நம்ம அறிவுக்கு எட்டியது..
ரயில் பாதைகளை கடக்கும்போது யானைகள் அடிபட்டு உயிரிழப்பது அண்மைக்காலமாக தமிழகம் மற்றும் கேரளாவில் அதிகரித்த வண்ணம் உள்ளது..
ஒரு பக்கம், வனவிலங்குகளுக்கே உண்டான அடர்ந்த வனப்பகுதியில் ரயில் பாதைகளை அமைத்து தவறு என்று இயற்கை ஆர்வலர்களின் வாதம்.
இன்னொரு பக்கம், நாட்டின் வளர்ச்சிக்கு என்று வரும்போது இதையெல்லாம் தவிர்க்க முடியாது என வாதம்.
இந்த வாதங்களை ஒதுக்கிவிட்டு பிரச்சனைக்கு வருவோம்.
கணிசமான வேகத்தில் பல்வேறு வளைவுகளைக் கொண்ட வனப்பகுதி ரயில் பாதையில் ரயிலை இயக்கும் ஓட்டுனர், திடீரென யானைகள் குறுக்கே வந்தால் பிரேக் போட்டு உடனே வண்டியை நிறுத்தி விட முடியாது.
கண்ணெதிரே யானைகள் அடிபடுவதை பார்ப்பதை தவிர அவருக்கு வேறு வழி இல்லை.
இந்த மோசமான நிலைமையை முடிவுக்குக் கொண்டுவர பகல் நேரத்திலாவது வனப்பகுதிக்குள் ரயிலை இயக்கும் போது மேலே ஆளில்லாத குட்டி விமானங்கள் அதாவது துரோன்களை பைலட் வாகனம் போல் இயக்கலாம்.
சில கிலோ மீட்டர் தூரம் வரை பருந்துப் பார்வையில் ரயிலை ஓட்டுபவருக்கு தெளிவான பார்வை கிடைக்கும். யானைகளின் நடமாட்டத்தை அவர் முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். அதற்கேற்ப துரிதமாக அவர் செயல்படவும் முடியும்.
– ஏழுமலை வெங்கடேசனின் முக நூல் பதிவு