சேலம்

சேலம் மக்களின் மிகப் புகழ்  பெற்ற பேக்கரியான ஹென்றி உல்சி பற்றிய நெட்டிசன் தளபதி மோகன் பதிவு.

முகநூல் எவர் கிரீன் சேலம் என்னும் பக்கத்தில்  “50 வயது மற்றும் அதைக் கடந்தவர்களுக்கு இந்த கட்டிடம் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை. சேலத்தின் மிகப் பிரதான மையப்பகுதியான கோட்டை மாரியம்மன் கோவிலின் ராஜகோபுரத்தின் எதிரில் ஆங்கிலேயர் காலத்தின் பழைய கட்டிடம்.    இதன் சிறப்பு என்னவென்றால் இந்த கட்டிடத்தின் முகப்பில் ஹென்றி உல்சி என்ற பெயரில் மிகப்பிரபலமான பேக்கரி ஒன்று இருந்தது.

நான் சிறுவனாக இருந்தபோது உடல்நிலை சரியில்லாவிட்டால் எனது தந்தையார் கோரிமேட்டில் இருந்து என்னைச் சைக்கிளில் அமர்த்தி இன்றைய மாவட்ட அரசு மருத்துவமனை யான ஜனரல் (general  hospital) ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று வெளியே வாசலில் குவித்து வைத்திருக்கும் பாட்டிலில் ஒன்றை வாங்கிக்கொண்டு உள்ளே சென்று மருத்துவம் பார்த்துவிட்டு அந்த பாட்டிலில் ஊற்றிக் கொடுக்கப்படும் சிரப் வாங்கிக்கொண்டு அடுத்து இந்த கட்டிடத்திற்கு வந்து பிரட் வாங்கிக்கொண்டு வீடு திரும்புவோம்

அந்த பிரெட்டின் சுவை இன்றுவரை நான் எந்த ஊரிலும் நான் சுற்றுலா சென்ற வெளிநாடுகளிலும் சுவைத்ததில்லை.   உங்களுக்கு இந்த அனுபவம் யாருக்கு இருக்கிறது”

என தனது பதிவில் தளபதி மோகன் குறிப்பிட்டுள்ளார்.

சேலம் மக்களின் மலரும் நினைவுகளைச் சுமக்கும் இந்த கட்டிடம் சில தினங்களுக்கு முன்பு இடிக்கப்பட்டு விட்டது.