டில்லி

னாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் தமிழ் இருக்கை குறித்து மோடி தவறான அறிக்கை அளித்துள்ளதாக நெட்டிசன் விமர்சித்து வருகின்றனர்.

சமீபத்தில் பிரதமர் மோடி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்குப் பாரதியார் பெயரில் ஒரு இருக்கையை அமைத்தார்.   இது பாஜகவினரிடையே வரவேற்பைப் பெற்றது.   தமிழுக்கு இது ஒரு புதிய அங்கீகாரம் எனவும் இதுவரை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழிக்கு ஹ்டனி இருக்கை இல்லை எனவும் பாஜகவினர் மோடிக்குப் புகழாரம் சூட்டினர்.

இது குறித்து நெட்டிசன் உஷா சுப்ரமணியன்,

“பிரதமர் மோடி தமிழுக்கு பாரதி பெயரில் ஒரு இருக்கையை பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் அமைத்துள்ள செய்தி கேட்டு எனக்குச் சிரிப்பு வருகிறது.  நான் இதே பல்கலைக்கழகத்தில் நான்கு வருடங்கள் முனைவர் சித்தலிங்கையாவிடம் தமிழ் பயின்றுள்ளேன்.   அநேகமாக 1962 ஆம் வருடம் நேருவின் தலைமையிலிருந்த  மத்திய அரசு அமைத்தது என நினைக்கிறேன்

அப்போது நான் ஒரே மாணவிதான் அங்குத் தமிழைப் படித்தேன்.   எனது ஆசிரியர் சித்தலிங்கையா எனக்கு ஏராளமான இலக்கியம் மற்றும் இலக்கணங்களைக்  கற்பித்தார்.  சில வருடங்கள் சென்ற பிறகு நான் அதே பல்கலைக்கழகத்தில் சித்தலிங்கையா மற்றும் சிவராமன் ஆகியோரின் வகுப்புக்களுக்குச் சென்றுள்ளேன். இந்த பல்கலையில் ஏற்கனவே 50 ஆண்டுகளாகத் தமிழ் உள்ளதால் புதியதாக இப்படி ஒரு அரசியல் விளையாட்டு செய்ய வேண்டாம்” 

எனப் பதிந்துள்ளார்.