சிறை செய்திதான்.. ஆனால் சசிகலா பற்றிய செய்தி அல்ல..

Must read

நெட்டிசன்:

1.சிறையில் அவருக்கு அளிக்கப்பட்ட அறையின் அளவு வெறும் 71 சதுர அடிகள்.

2.அந்த மிகச் சிறிய அறையில் கட்டில் கிடையாது.தரையில் ஒரு மெத்தை இருக்கும்.அதில் தான் படுக்கை.

3.அறையில் அட்டாச்சுடு பாத்ரூம் கிடையாது.ஒரு மூலையில் கழிவறை இருக்கிறது.

4.குளிப்பதற்கு தனி ஷவர் கூட இல்லை.

5.அறையின் ஒரு மூலையில் கை கழுவிக் கொள்ள ஒரே ஒரு வாஷ்பேசின் மட்டுமே உள்ளது.

6.தினசரி 1.26 டாலர் மதிப்புள்ள அரிசி சாதம் மற்றும் காய்கறிகள் அளிக்கப்படும்.அதற்கு மேல் தேவையெனில் அதை அவர் தனியாக பணம் செலுத்தி கேன்டீனில் தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.

7. இவரைப் பார்க்க சிறைக்கு வருவோர் ஒரு கண்ணாடித் தடுப்புக்கு பின்பறம் நின்று பேசிக் கொள்ளலாம்.அதுவும் 30 நிமிடங்களுக்கு மட்டுமே.

8.இவரது அறையில் ஒரு சிறிய டிவி இருக்கிறது.அதில் சட்ட அமைச்சகம் பதிவு செய்த நிகழ்ச்சிகள் மட்டுமே ஒளிபரப்பாகும்.வேறு எந்த சேனலும் அதில் வராது.

9.சிறையில் இவர் இருப்பது தனிச் சிறை.எனவே வேறு யாரும் இவரிடம் பேசவே முடியாது.

10.இவரது சொத்து மதிப்பு 620 கோடி டாலர்கள்.தலைநகரில் உள்ள அவரது வீடு மட்டும் 40 லட்சம் டாலர்கள் மதிப்பிலானது. அந்த நாட்டிலேயே மிக வசதியான குடும்பம் இவரது. போதும்…போதும்…யார் அவர் ன்னு கேக்குறீங்களா? அவர் தான் ஜே ஓய் லீ. சாம்சங் நிறுவனத்தின் தலைவர்.

2013 ல் கொரியாவின் 11 வது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவருக்கு 4 கோடி டாலர்கள் லஞ்சம் தந்த புகாரில் சிக்கி, விசாரணை நடைபெற்று, அனைத்து புகார்களும் நிருபணமாகி, கைதாகி நேற்று தென் கொரிய தலைநகர் சியோலில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். மேலே இருப்பது சாம்சங் நிறுவன அதிபர் இருக்கும் சிறையைப் பற்றிய குறிப்புகள். அரசன் அன்றே கொல்வான்,லஞ்சமும் ஊழலும் பொறுத்திருந்து கொல்லும்…

(நெட்டிசன்)

More articles

Latest article