கடந்த 21 ஆண்டுகளாக நெதர்லாந்து மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் கேஎல்எம் நிறுவன விமானத்தில் துணை விமானியாக பணியாற்றி வரும் சுவாரஸ்யமான தகவலை வெளியிட்டுள்ளார்.

நெதர்லாந்து நாட்டின் மன்னர் வில்லியம் அலெக்சாண்டர் டட்ச்சில் இருந்து வெளியாகும் தி டெலிகிராப்புக்கு என்ற செய்திதாளுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் ‘‘ கடந்த 21 ஆண்டுகளாக உள்ளூர் விமானங்களை துணை விமானியாக இயக்கி வந்துள்ளேன். இது எனது பொழுதுபோக்கு விஷயமாகும். கேஎல்எம் சிட்டிஹூப்பர் என்ற விமானத்தை மாதத்தில் 2 முறை வீதம் ஓட்டி வந்துள்ளேன். அரச பணிகளில் இருந்து ஓய்வு எடுப்பதற்காக இந்த பணியில் ஈடுபட்டு வருகிறேன்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில்,‘‘ ஒரு விமானம், பயணிகள், சிப்பந்திகள் என்னிடம் இருக்கும் போது அதற்கு நான் பொறுப்பாளனாகி விடுகிறேன். அதனால் விமானத்தை ஓட்டிச் செல்லும் போது எனது பிரச்னைகளையும், கவலைகளையும் வானத்திற்கு எடுத்துச் செல்ல முடியாது. நான் முழு அளவில் விமானத்தை ஓட்டுவதில் ஈடுபட முடிந்தது’’ என்றார்.

கேஎல்எம் சிட்டி ஹூப்பருகஅகு பதிலாக போயிங் 737 ரகம் விமானம் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த விமானத்தை ஓட்டவும் மன்னர் பயிற்சி எடுத்து வருகிறார்.

தொடர்ந்து அவர் கூறுகையில்,‘‘ அமெரிக்காவில் நடந்த விமான தாக்குதலுக்கு பிறகு விமானி அறைக்கு பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதனால் 2011ம் ஆண்டு முதல் விமானியாக எனக்கு அங்கிகாரம் வழங்கப்பட்டது. துணை விமானி என்ற அடிப்படையில் பயணிகளுக்கு அறிவிப்புகளை வெளியிட்டு பேசும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

எனினும் நான் யார் என்பதை அடையாப்படுத்திக் கொள்ளவில்லை. அனைத்து அறிவிப்புகளையும் கேப்டன், சிப்பந்திகள் பெயரில் தான் அறிவிப்பேன். அதனால் எனது சொந்த பெயரை சொல்லமாட்டேன். ஆனால், இதை பெரும்பாலான பயணிகள் கண்டுகொள்வது கிடையாது’’ என்றார்.

முதன்முதலாக 30 ஆண்டுகளுக்கு முன்பு இளவரசி கேத்தரினாவை தான் ஓட்டிய விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளார். 1980ம் ஆண்டுகளில் கென்யாவுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தான் தன்னார்வ விமானியாக அவர் பணியாற்றி வந்தார். ஆப்ரிக்காவில் உள்ள மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கல்வி அறக்கட்ட¬ளை என்ற மருத்துவ உதவி அமைப்பிற்கு அழைத்துச் சென்றுள்ளார் என்பது கூடுதல் தகவல்.

மன்னர் குடும்பத்தில் இருந்து விமானியாக வருவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே பிரிட்டன் இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது இரு மகன்களும் முழு தகுதி பெற்ற விமானிகள். இதில் ஒரு மகன் வில்லியம் ராணுவ பணியில் தேடுதல் மற்றும் மீட்பு பணி ஹெலிகாப்டர் ஓட்டியவர்.

மற்றொரு மகன் ஹாரே ஆப்கானிஸ்தானில் அபாச்சி ஹெலிகாப்டரை ஓட்டியுள்ளார். இதேபோல் புருனேவில் சுல்தான் ஹசனால் பொல்கியா சமயங்களில் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது விமானி அறையில் பங்கெடுத்துக் கொள்வார்.