[embedyt] https://www.youtube.com/watch?v=Ar8GWKv3Kng[/embedyt]
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படம் இந்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் .
வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் அஜித்துடன் நடித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் இசையமைப்பாளராகப் பணிபுரிந்துள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் இந்தப் படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தநிலையில் ‘தீ முகம்தான்’ என்ற பாடலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. பா.விஜய் எழுதியிருக்கும் இந்தப் பாடல் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.