நெல்லை: தென்காசி, ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் தேவாலய பாதிரியார் ஸ்டான்லி குமார்  பாலியல் புகார் காரணமாக கைது செய்யப்பட்டு உள்ளார்.

தேவாலயத்திற்கு வரும் பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, அவர்மீது சபை மக்கள் அங்குள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் புகார் கொடுத்தநிலையில், பாதிரியார் குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவரும் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாதிரியார் என்ற பெயரில் சர்ச்சைக்கு வரும் பெண்களை வேட்டையாடுவதில் கிறிஸ்தவ பாதிரியார்களும் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் இதுவரை கேரளாவில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், தற்போது கேரள பார்டர்களான கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களிலும் அரங்கேறி உள்ளது.

நாகர்கோவில் -கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகே பிரார்த்தனைக்கு வந்த பெண்களை மயக்கி ஆபாச படம் எடுத்தது தொடர்பாக இளம்பெண்கள் அளித்த புகாரின் பேரில்,  பெனடிக் ஆன்றோ என்ற 29 வயது இளம் பாதிரியாரை காவல்துறையினர் கைது செய்தனர். இவர்மீது பல பெண்கள் புகார் கொடுத்துள்ள நிலையில், அவரது மொபைல் மற்றும் லேப்டேப் ஆய்வு செய்யப்பட்டதில் 80 பெண்களுடன் அவர் நெருக்கமாக இருப்பது போன்றை புகைப்படங்கள் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், அப்பகுதி  கிறிஸ்தவ மக்கள் வெளியே தலைகாட்ட முடியாத அளவுக்கு சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், தென்காசி, ஆலங்குளம் அருகே உள்ள வடக்கு சிவகாமிபுரம் தேவாலய பாதிரியாராக இருந்து போதனை செய்து வந்த ஸ்டான்லி குமார் என்பவர் மீது அப்பகுதி மக்கள் கொடுத்த புகாரின் பேரில், ஸ்டான்லி குமாரை காவல்துறையினர் கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள பாதிரியார் ஸ்டாலின் குமாரும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல்துணைசூப்பிரண்டு அலுவலகத்தில் பெண் ஒருவர் அளித்த புகாரில்,   கடந்த 10 ஆண்டுகளாக எங்கள் ஊர் அருகே வடக்கு சிவகாமிபுரத்தில் உள்ள ஒரு சர்ச்சில் விசுவாசியாக இருந்து வருகிறோம். என் மூத்த மகளுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையல் எனது மகள் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.

அதற்காக நான் அந்த சர்ச்சில் உள்ள மத போதகராக இருந்த ஸ்டான்லி குமாரிடம் எனது மகளுக்காக ஜெபித்துக் கொள்ளுமாறு கேட்டு கொண்டேன். அதற்கு அவர் என் பெண்ணை சர்ச்சுக்கு அழைத்து வருமாறு வற்புறுத்தினார். நானும் எனது மகள் குணமடைவாள் என்ற நம்பிக்கையில் மத போதகரிடம் அழைத்து சென்றேன். மத போதகர் எனது மகளை சர்ச்சில் 3 நாட்கள் தங்கி இருக்க சொன்னார். அதனால் போதகர் மீது உள்ள நம்பிக்கையில் நானும் எனது மகளை அங்கேயே விட்டு விட்டு வந்தேன்.

ஆனால் மத போதகர் ஜெபிக்கிறேன் என சொல்லி மகளிடம் பாலியல் அத்து மீறலில் ஈடுபட்டுள்ளார். மேலும் மகளிடம் ஆபாசமாக பேசி தவறாக நடக்க முயன்றுள்ளார். இதை எனது மகள் என்னிடம் கூறினார். இந்த நிலையில் தான் ஸ்டான்லி குமார் எனது இரண்டாவது மகளை அழைத்து மன்னிப்பு கேட்பது போல் நடித்துள்ளார். மேலும் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் கொடுத்தால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறி மிரட்டி உள்ளார். இதற்கு பயந்து நாங்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க வில்லை என்று கூறியுள்ளார்.