நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொலை சம்பவங்கள் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.  திருநெல்வேலியில் பாஜக பிரமுகர் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம்  மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், காவல்துறை செயலிழந்து விட்டது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலிபாளையங்கோட்டை அடுத்த மூளிகுளம் பகுதியைச் சேர்ந்தவர்  ஜெகன். இவர் பாஜக இளைஞரணி  உறுப்பினராக இருந்து வருகிறார். இவர்  வழக்கமான பணிகளை முடித்து விட்டு இரவு வீட்டிற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வந்துகொண்டிருந்தார்.அவரது வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு அங்கிருந்த பாளையங்கால்வாய் அருகே நின்று கொண்டு போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அங்கு  திடீரென வந்த மர்ம நபர்கள் ஜெகனை சூழ்ந்து சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

ஜெகனின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் ஜெகன் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார். ஜெகனின் நிலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் பாளையங்கோட்டை காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.  சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி உள்ளனர். மாநகர காவல்துறை ஆணையாளர் பிரவேஷ்குமார் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை சம்பவம் நடைபெற்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு மேற்கொள்ளும் பணியும் போலீசாரால் தீவிரமாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் இருந்த நபர்களிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இது மட்டுமில்லாமல் மோப்ப நாய் மூலம் கொலையாளியை தேடும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் பாளையங்கோட்டை பகுதியில் கொலை சம்பவம் நடைபெற்ற நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

உயிரிழந்த ஜெகன் மீது ஏற்கனவே கொலை உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் குற்ற பதிவேடு பட்டியலிலும் ஜெகன் பெயர் உள்ளது.

இந்த கொலை முன்விராதத்தின் காரணமாக நடைபெற்றதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்சனையா என்பது தொடர்பாகவும் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லையில் கடந்த இரண்டு மாதத்தில் பதினைந்துக்கும் மேற்பட்டோர் தொடர்ச்சியாக வெட்டி கொலை செய்யப்பட்டு வரும் சூழ்நிலையில் தற்போது பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பாஜக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பாளையங்கோட்டை அருகே பாஜக இளைஞரணி பொதுச் செயலாளர் ஜெகன் பாண்டியன் மர்ம கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த கையோடு வன்முறை வெறியாட்டங்கள் மூலம் பாஜகவினரை முடக்க நினைக்கும் திமுகவினர் முயற்சி பலிக்காது என ஆவேசமாக கூறியுள்ளார்.

செயலிழந்தது காவல்துறை: ‘கொலை’ மாவட்டமானது நெல்லை – ஒரே மாதத்தில் 10 பேர் சாவு – மக்கள் பதற்றம்…