திருவனந்தபுரம்: நானோ, காங்கிரஸோ.. ராமரை  ஒருபோதும் பாஜகவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என காங்கிரஸ் எம்.பி.  சசி தரூர் கூறி உள்ளார்.

காங்கிரஸ் செயற்குழு (CWC) உறுப்பினரும் எம்.பி.யுமான சசி தரூர், ஒவ்வொரு ‘ராம பக்தரும்’ பாஜக ஆதரவாளர் அல்ல என்றும், தானும்,  பெரும் பழமையான கட்சியும் (காங்கிரஸும்) ராமரை விட்டுக் கொடுப்பதற்கு எந்த காரணமும் இல்லை என்றும் கூறினார்.

இந்தியாவின் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வாக ராமர்கோவில் பிரஷ்டை, உ.பி. மாநிலத்தின் அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமியில் மிக பிரண்டமாக கட்டுப்பட்டு திறக்கப்பட்டு உள்ளது. உலக நாடுகளே பிரமித்து பார்க்கும் வகையில் ராமர் கோவிலை ஏற்கனவே அறிவித்தபடி பாஜக அரசு கட்டி முடித்து திறந்துள்ளது. இதற்கு இந்திய மக்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.  இந்த பிரதிஷ்டை விழாவில் கலந்துகொள்வதை காங்கிரஸ் தலைமை புறக்கணித்தது. இது காங்கிரஸ் தொண்டர்கள் உள்பட மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராமர் கோவில் விவகாரம் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும் நம்பப்படுகிறது.

இந்த நிலையில், கேரளாவைச்சேர்ந்த காங்கிரஸ் எம்.பி. சசிதரூர்,  நானோ அல்லது காங்கிரஸோ, ராம பிரானை பாரதிய ஜனதா கட்சிக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம் என கூறியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் பிராண பிரதிஷ்டை விழாவை காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் சசிதரூர் திடீரென இவ்வாறு அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளத.

இதுகுறித்து,  சசி தரூர் எக்ஸ் தளத்தில், “சியாவர் (சீதா தேவி) ராமச்சந்திரா கி ஜெய். நான் ஜெய் ஸ்ரீராம் என்று சொல்லவில்லை. சிலர் ஜெய் ஸ்ரீராம் என்பதை அரசியல் முழக்கமாக மாற்றியுள்ளனர். வட இந்தியப் பேச்சு வழக்கில் சியா என்றால் சீதை என்று பொருள்.

சீதாவின் கணவர் ராமச்சந்திராவுக்கு ஜெய் என்று நான் சொன்னது, பெண்கள் விரோத மனப்பான்மையால் சில நபர்கள் சீதையைத் தவிர்க்க முயற்சிக்கிறார்கள். அதனால்தான் ராமரை மட்டும் பார்க்கிறார்கள்.

பிரார்த்தனை செய்யும் ஒவ்வொருவரும் சீதையுடன் நின்ற ராமனைத் தேடுகிறார்கள் (எனது தனிப்பட்ட பக்தி பற்றி ஒரு வாக்கியம் எழுதியுள்ளேன்) இதில் எந்த சர்ச்சையும் நான் காணவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

“ராம பிரானை பாஜகவிடம் ஒப்படைக்க தானோ அல்லது அவரது கட்சியோ தயாராக இல்லை” என்று கூறியுள்ளார். மேலும், “காங்கிரஸ் ராமரை பாஜகவிடம் விட்டுவிட வேண்டுமா? அதற்கு நாங்கள் தயாராக இல்லை” எனக் கூறியுள்ளார்.