மத்திய பிரதேச மாநிலத்தின் சீனியர் ஐஏஎஸ் அதிகாரி,   பர்வாரி மாவட்ட கலெக்டர் அஜய் சிங் கங்வார்.  இவர் தனது ஃபேஸ் புக்கில் ஜவஹர்லால் நேருவைப் பற்றி புகழ்ந்து எழுதினார். வந்தது வினை. பிஜேபி அரசு அவரை ம.பி. தலைநகர் போபாலுக்கு  தற்போது ட்ரான்ஸ்ஃபர் செய்துள்ளது.
13319760_10208639394918033_697069538702953855_n
ப்படி அவர் என்னதான் எழுதி விட்டார்?
“1947 ல் இந்த நாடு தாலிபான்களையொத்த ஹிந்து ராஷ்ட்ராவாக மாறுவதை தடுத்தது நேரு செய்த தவறா?
ஐஐடி, இஸ்ரோ, பெல், ஐஐஎம் போன்ற நிறுவனங்களை தொடங்கி இந்திய முன்னேற்றத்துக்கு வித்திட்டாரே அது நேரு செய்த தவறா?
சாரா பாய் ஹோமி ஜஹாங்கீர் போன்றர்களை கௌரவித்தார். அது நேரு செய்த தவறா?
நேரு ஆசாராம், பாபா ராம்தேவ் போன்ற சன்னியாசிகளை ஊக்குவிக்கவிக்காதது நேரு செய்த தவறா?”
இதுதான் அவர் எழுதியது. இதற்காகத்தான் டிரான்ஸ்பர்!
(தகவல் நன்றி: என்.டி.டி.வி.)