டெல்லி: முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று நடைபெற்றுள்ள நிலையில்,  நாளை (செப்டம்பர் 12ந்தேதி) நாடு முழுவதும் இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. அதற்காக வழிகாட்டுதல்களும் அறிவிக்கப்பட்டு உள்ளன.

மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., நர்சிங்  போன்ற மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ என்ற நுழைவுத்தேர்வு ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு  முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு செப்டம்பர்11ந்தேதியும், இளநிலை மருத்துவப் படிப்புக்கான நுழைவு தேர்வு செப்டம்பர் 12ந்தேதியும் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது. அதன்படி  முதுகலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, நாடு முழுவதும் கொரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றி நடத்தப்பட்டுள்ளது.

நாளை இளநிலை  மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்வை எழுதும் மாணாக்கர்களுக்கான வழிகாட்டுதல்களை தேசிய தேர்வு முகமை  அறிவித்து உள்ளது.

நீட் யுஜி ஹால் டிக்கெட்டுடன், நீட் தேர்வு தேதியில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களின் தொகுப்பை என்டிஏ வெளியிட்டுள்ளது. NTA ஆல் நிர்ணயிக்கப்பட்ட NEET UG ஆடை குறியீட்டை விண்ணப்பதாரர்கள் பின்பற்ற வேண்டும், முகமூடிகளை அணிய வேண்டும் மற்றும் NEET ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்.

தேர்வு எழுதும் ஒவ்வொருவரும் மாஸ்க் அணிய வேண்டும், ஹால் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டும். தேர்வர்கள் ஒரு சில பொருட்களை மட்டுமே தேர்வு கூடத்திற்கு கொண்டு வர அனுமதிக்கப்படுகிறார்கள். தேர்வர்கள் முகமூடிகள், கையுறைகள், வெளிப்படையான தண்ணீர் பாட்டில்கள் மற்றும் கை சுத்திகரிப்பானை ஒரு வெளிப்படையான பாட்டில் (50 மிலி) பரீட்சை மண்டபத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

தேர்வு மையத்தில் மின்னணு சாதனங்கள், கனமான நகைகள் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் அனுமதிக்கப்படாது. அதாவது,

நீட் தேர்வு அனுமதிச் சீட்டுடன் சுய அறிவிப்புப் படிவம்

புகைப்படம் (விண்ணப்பப் படிவத்தில் பதிவேற்றப்பட்ட அதே படம்)

 செல்லத்தக்க புகைப்பட அடையாள அட்டை

 50 மில்லி அளவில் சானிடைசர்

 உட்பக்கம் தெளிவாகத் தெரியும் வகையிலான தண்ணீர் பாட்டில்

முகக்கவசம்

கையுறை

மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ்

மாணவர்கள் குறைவான உயரம் கொண்ட காலணிகளை அணியலாம்.

ஷூ உள்ளிட்ட மூடப்பட்ட காலணிகளுக்கு அனுமதி இல்லை.

லேசான அரைக்கை மற்றும் முழுக்கை ஆடைகளுக்கு அனுமதி இல்லை.

மதம் சார்ந்த அல்லது சமூகப் பழக்கவழக்கம் சார்ந்த குறிப்பிட்ட ஆடைகளை அணிந்திருக்கும் தேர்வர்கள், கட்டாயம் சோதனை செய்யப்படுவர். இதற்காக அவர்கள் சீக்கிரமாகவே தேர்வு அறைக்கு வரவேண்டியது அவசியம்.

 தேர்வின்போது குளறுபடிகளைத் தவிர்க்க, தேர்வு மையத்திலேயே மாணவர்களுக்குப் புதிதாக முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கெனவே மாணவர்கள் அணிந்திருந்த முகக்கவசத்தைக் கழற்றிவிட்டு, தேர்வு அறையில் அளிக்கப்படும் முகக்கவசத்தை அணிய வேண்டியது அவசியம்.

நீட் தேர்வு மைய நகரங்களும் இந்த ஆண்டு 155 லிருந்து 198 ஆக உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு 3,862 மையங்களிலிருந்து தேர்வு மையங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் 1,200 முதுகலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட மையங்களில் இந்த தேர்வு நடைபெற உள்ளது நிலையில், 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர்.