சென்னை:
மிழக அரசின் கல்வித் தொலைக்காட்சியில் இன்றுமுதல் நீட் பயிற்சி அளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்து உள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், கல்வி நிலையங்கள் உள்ள அனைத்து தொழில்களும் முடங்கி உள்ளன. இதனால் ஒத்தி வைக்கப்பட்ட பள்ளித் தேர்வுகள், போட்டித் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தள்ளிவைக்கப்பட்ட 10ம் வகுப்பு தேர்வு ஜூன் 15ந்தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தமிழகத்தில் 12ஆம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணிக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் முடிந்த பின்னர் தேர்வு முடிவுகள் வெளியாகும் என்பதால், மாணவர்கள் அடுத்த கட்டத்தை நோக்கி நகர வேண்டிய சூழல் உள்ளது.
பிளஸ்2 தேர்வு எழுதிய மாணவர்கள் மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்வி பெற நீட், ஜேஇஇ தேகுறிப்பாக நீட் தேர்வு எழுத வேண்டியதிருப்பதால், அதற்கான  பயிற்சி மையங்களுக்குச் செல்ல முடியாத நிலை உள்ளது.
தமிழகத்திதில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழஅரசே இலவசமாக நீட் போன்ற பல்வேறு பயிற்சிகளை வழங்கி வருகிறது. ஆனால், இந்த ஆண்டு மாணவ மாணவிகளுக்கு நேரடி பயிற்சி கொடுக்க முடியாத நிலையில்,  பல மாணவர்கள் ஆன்லைன் மூலம் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதையடுத்து  தமிழக அரசுக் கல்வித் தொலைக்காட்சியில் நீட் பயிற்சி வகுப்புகளை நடத்த முடிவு செய்துள்ளது.
இந்தப் பயிற்சி வகுப்புகள் இன்று  முதல் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வல்லுநர்களைக் கொண்டு  நடத்தப்படுகிறது.
இந்தப் பயிற்சி, தினமும் 2 மணி நேரம் ஒளிபரப்பாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.