சென்னைக்கு ‘’மிக அருகே’ வீடு கட்டியவர்களின் கதி..

’’சென்னைக்கு மிக அருகே மனை’’ என்று பத்திரிகைகளில் வெளியான விளம்பரத்தைப் பார்த்து, திண்டிவனம், விழுப்புரத்தில் வீடு கட்டிய தலைமைச் செயலக ஊழியர்கள் விதி பிதுங்கி நிற்கிறார்கள்.

’’ஊரடங்கு ஓவர்.. உடனடியாக வேலைக்கு வாருங்கள். உங்களுக்காக ஸ்பெஷல் பஸ்கள் இயக்கப்படும்’’ என்று தலைமைச் செயலகத்தில் இருந்து ,அதன் ஊழியர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த சிறப்புப் பேருந்துகள் தலைமைச் செயலகத்தில் இருந்து செங்கல்பட்டு வரை மட்டுமே இயக்கப்படுகின்றன.

அதையும் தாண்டி குடியிருப்பவர்கள் அலுவலகம் வருவதற்கு என்ன செய்வார்கள்?

திண்டிவனத்தில் வசிக்கும் சரவணன் கதையைக் கேட்போமா?

‘’ நான் கோட்டையில் உயர் கல்வித்துறையில் பணி புரிகிறேன். திண்டிவனத்தில் இருந்து கோட்டைக்கு 139 கிலோ மீட்டர். பஸ் இல்லை. என் மகன் திண்டிவனத்தில் இருந்து கோட்டைக்குத் தனது ‘பைக்’கில் என்னை ஏற்றிக் கொண்டு வந்தான். வேலை முடியும் மாலை நேரம் வரை காத்திருந்து என்னை மீண்டும் திண்டிவனம் அழைத்துச் சென்றான்’’ என்கிறார், சரவணன்.

இது போல் பல சரவணன்கள் திண்டிவனத்தைத் தாண்டியும், விழுப்புரம் போன்ற இடங்களில் இருந்து பைக்கில் வந்து பணி புரிந்து விட்டுச் செல்கிறார்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்