சென்னை:
2023ஆம் ஆண்டு நீட் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் இருந்து சுமார் 1.05 லட்சம் பேர் வரை நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர் என்றும், இதில் 15,000 மேற்பட்டவர்கள் அரசு பள்ளி மாணவர்கள் என்று கூறப்படுகிறது. நீட் தேர்வில் தகுதி பெறும் மாணவர் மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடியும் என்பதால் இந்த தேர்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வுக்கு இன்று கடைசி நாள் என்பதால் மேலும் பலரும் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.