சென்னை:
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று நடக்கிறது.

நாடு முழுவதும் 600 மையங்களில் நடக்கும் இந்த தேர்வை எம்பிபிஎஸ் முடித்த1.60 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 271 நகரங்களில் 600-க்கும் மேற்பட்ட மையங்களில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு இன்று காலை 9 மணி முதல் பகல் 12.30 மணி வரை ஆன்லைனில் நடைபெற உள்ளது.