சென்னை:

அடுத்த வருடம் பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பி.இ. கலந்தாய்வு நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் தர முடியாது என்று அமைச்சர் தெரிவித்தது மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வருடம்தோறும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தோ்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் மாணவா்களுக்கு மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும். நடப்பு கல்வி ஆண்டிலும் இதே முறைதான் பின்பற்றப்படும் என்று மாணவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் மத்திய அரசு அகில இந்திய அளவிலான நீட் பொதுத் தோ்வை அறிமுகப்படுத்தியது.

இதனால் பன்னிரண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்றும் விரும்பிய படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நீர் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகள் பல, போராட்டம், நடத்தி வருன்றன.

வேறு பல அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனாலும் அரசு உச்சநீதிமன்றத்தின் மூலம் நீட் பொதுத் தோ்வை அமல் படுத்தியது. மேலும் எதிர் வரும் காலங்களில் பொறியில் படிப்புக்கும் இந்திய அளவிலான பொதுத்தோ்வு அறிமுகப்படுத்தப்படும் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் அடுத்தவருடம் நீ்ட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு பெறப்பட்டுவிடும் என்று ஆளும் தரப்பில் சொல்லபட்டு வந்தது.

இந்த நிலையில் இன்று செய்தியாளா்களை சந்தித்த தமிழக உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி. அன்பழகன், “வரும் கல்வி ஆண்டில் பி.இ. படிப்புக்கான கலந்தாய்வு பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும் என்பதற்கு உத்தரவாதம் தர இயலாது.

அனைத்து மாநிலங்களும் இந்திய அளவிலான பொதுத்தோ்வை பின்பற்றும் பட்சத்தில் நாமும் பொதுத் தோ்வில் கலந்து கொண்டுதான் ஆகவேண்டும்” என்று தெரிவித்தார்.

அவரது கருத்தால் மருத்துவ (நீட்) நுழைவுத்தே்ாவைப் போன்று பொறியியல் துறையிலும் தமிழக மாணவா்கள் பின தங்கி விடும் சூழல் ஏற்படும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் அமைச்சரின் கருத்தால் மாணவர்கள் அதிர்ச்சியில் உறந்துள்ளனர்.ட்!: கைவிரித்த அமைச்சர்: அதிர்ச்சியில் மாணவர்கள்!