சென்னை: தமிழக சட்டசபையில் நீட் விலக்கு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து கூறிய -அமைச்சர் துரைமுருகன் மசோதா ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாகவே கருத்தப்படும் என்றார்.
நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு சட்டசபையின் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. அதையடுத்து உரையாற்றிய சபாநாயகர் அப்பாவு, ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்து, அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார்.
இதையடுத்து, தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நீட் விலக்கு மசோதாவை தாக்கல் செய்து, விரைவாக உரையாற்றினார்.
அப்போது, பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டனர். அப்போது பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் முதலில் பேசுவதற்கு சபாநாயகர் அனுமதி அளித்தார். அதையடுதுது பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் நயினார் நாகேந்திரன், நீட் விலக்கு மசோதா சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றி யதாக கூறுவது தவறு என்றும், அன்று சட்ட மசோதாவை எதிர்த்து நாங்கள் வெளிநடப்பு செய்து இருந்தோம் என்றும் கூறினார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய சாபாநாயகர், மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றும்போது அவையில் இருப்பவர்களின் கருத்தின் அடிப்படையில்தான் அது நிறைவேற்றப்படும். அதன்படி நீட் விலக்கு மசோதா அன்று ஒருமானதாக நிறைவேற்றப்பட்டது என்று விளக்கம் அளித்தார்.
மீண்டும் நயினார் நாகேந்திரன் பேச முயன்றார். அப்போது குறுக்கிட்ட சாபாநாயகர் அப்பாவு, அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டுவிட்டு அதன் பின்னர் கருத்து தெரிவிக்குமாறு கூறினார். அதையடுத்து, நீட் விலக்கு மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகபாஜக சட்டமன்ற தலைவர் நயினார் நாகேந்திரான் கூறினார். அதையடுத்து சட்டப்பேரவையில் இருந்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து பேசிய அமைச்சர் துரைமுருகன், அவையில் உள்ள உறுப்பிர்கள் மட்டும்தான் கணக்குல வருவாங்க. போன தடவ நீங்க வெளில போயிட்டீங்க.. அப்ப அது ஒரு மனதாகத்தான் நிறைவேற்றப்பட்டது. இப்பவும் நீங்க வெளில போயிட்டீங்கனா நாங்க ஒரு மனதா நிறைவேத்திக்கிறோம் என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனுக்கு பதில் அளித்தார்.
சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பாஜக உறுப்பினர்கள் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, ஆளுநர் ஏகே.ராஜன் குழு அறிக்கையை அவமானத்தும் வகையில் கருத்து தெரிவிக்கவில்லை என்று விளக்கம் அளித்தனர்.