சென்னை: நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது தொடர்பாக விவாதிக்க பிப்ரவரி 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நீட் விலக்கு தொடர்பாக விவாதித்து முடிவு செய்திட, சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்
தமிழக சட்டமன்றத்தில் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட நீட் விலக்கு மசோதா 2வது முறையாக ஆளுநர் ஒப்புதல் வழங்க மறுக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டு உள்ளது. அத்துடன், திருப்பிய அனுப்பியதற்கு காரணமாக நீட் விலக்கு மசோதா பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள மாணவர்களுக்கு எதிராக உள்ளதாகவும், இந்த மசோதாவை மறு ஆய்வு செய்யுமாறும் ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது.
இது தமிழக அரசியல் கட்சிகளிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதையடத்து, இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிப்ரவரி 5-ம் தேதி அனைத்து கட்சி கூட்டத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முதல்வர் ஸ்டாலின், நீட் விலக்கு மசோதா குறித்து ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துக்கள் தமிழக மக்களால் ஏற்கத்தக்கதல்ல. நீட் விலக்கு மசோதாவை மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்ற அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். ஆளுநரின் கருத்துக்கள் ஆராயப்பட்டு நீட்தேர்வு பற்றிய உண்மை நிலை அனைவருக்கும் தெளிவாக விளக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் அனைவரிடமும் கருத்தொற்றுமை நிலவி வருகிறது. நீட்விலக்கு மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பியநிலையில் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி ஆராய பிப். 05 தேதி காலை 11 மணிக்கு அனைத்துகட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறும். சட்டத்திற்கு அடிப்படையான கூற்றுக்கள் தவறானவை என ஆளுநர் தெரிவித்துள்ள கருத்துகள் ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி…