சென்னை

மிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களையும் 6 மாதத்துக்குள் மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூலம் அரசு மது விற்பனை செய்து வருகிறது.  இந்த மதுக்கடைகளுடன் மதுக்கூடங்களும் (பார்கள்0 இணைக்கப்பட்டு செயல் பட்டு வருகின்றன.   சமீபத்தில் அரசு டாஸ்மாக் கடைகளில் பார்கள் நடத்த புதிய ஏலம் விட டெண்டர் கோரியது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   ஏற்கனவே கொரோனா காலத்தில் டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் மூடப்பட்டிருந்ததால் வியாபாரம் நடக்காததால் புதிய ஏலத்துக்குத் தடை விதிக்க மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், “தமிழகத்தில்  டாச்மாக்  கடைகளுக்கு மது விற்க மட்டுமே அனுமதி  அளிக்கப்பட்டுள்ளது.  கடைகளுடன் பார்களை இணைத்து நடத்தச் சட்டத்தில் இடமில்லை.  எனவே அனைத்து டாஸ்மாக் பார்களையும் இன்னும் 6 மாதத்துக்குள் மூட வேண்டும்” என உத்தரவிட்டுள்ளது.