சென்னை:

நீட் தேர்வை எதிர்கொள்ள உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தை சேர்ந்த 1500 பேருக்கு வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய மாநில அரசுகள் மீது கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு தமிழகத்திலேயே நீட் தேர்வு மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இவர்கள் தமிழகத்தில் உள்ள 10 மையத்தில் தேர்வு எழுதுவர் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் நீட் தேர்வை எதிர்கொள்கிறார்கள் என்ற விவரத்தை தெரிவிக்க மறுத்துவிட்டார்.