பண்ருட்டி:

களை நீட் தேர்வுக்காக புதுச்சேரி அழைத்துச்சென்ற சீனிவாசன் என்பவர், மாரடைப்பு காரணமாக புதுச்சேரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ செய்த குளறுபடி காரணமாக மனஅழுத்தம் ஏற்பட்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆகி அதிகரித்து உள்ளது.

மருத்துவ நுழைவுத்தேர்வுக்கான நீட் தேர்வை வெளி மாநிலங்களில் தேர்வு மையம் அமைத்து சிபிஎஸ்இ வஞ்சித்த காரணத்தால், கேரளாவுக்கு அழைத்துச்சென்ற சென்ற திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் மாரடைப்பால் மறைந்தார்.

அதுபோல சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வடக்குத்தெருவை சேர்ந்த கண்ணன் என்பவரும் அதிர்ச்சியால் மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தை தழுவினார்.

இந்நிலையில்,  பண்ருட்டியில் இருந்து புதுச்சேரிக்கு நீட் தேர்வு எழுத மகளை அழைத்து வந்த சீனிவாசன் என்பவர் மூச்சுத்திணற லால் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரும் சீனிவாசன் உயிரிழந்தார்.

இதுவரை இந்த ஆண்டு நீட் தேர்வு குளறுபடி காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்து உள்ளது. உயிரிழந்த மாணவியின் தந்தை உடல் அவரது சொந்த ஊரான பண்ருட்டிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சோக சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.