டில்லி,

நீட் மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசின் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

மருத்துவ மாணவர் சேர்க்கையில், தமிழகஅரசின் 85% உள்ஒதுக்கீடு அரசாணையை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின்  மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், தமிழக அரசின் அரசாணையான  85 சதவீத உள் ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதற்கு தடை விதிக்க முடியாது என்றும்,  மாநில பாட திட்டம், சி.பி.எஸ்.இ., பாட திட்டம் என மாணவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டுவதை ஏற்க முடியாது.

சமநிலை முறை வேண்டும் என்பதற்காக நீட் தேர்வு கொண்டு வரப்பட்டது. வேறுபாட்டை அதிகபடுத்தும் நீட் விலக்கு மசோதாவை தமிழக அரசு கொண்டு வந்தது ஏன் என கேள்வி எழுப்பினர்.

இதன் காரணமாக தமிழக மாணவர்களின் மருத்துவப்படிப்பு கனவு காணல்நீராகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மத்தியஅரசு ஒப்புதல் அளித்தால் மட்டுமே இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் மருத்துவம் படிப்பது உறுதி செய்யப்படும் இல்லையேல்… தமிழக மருத்துவ கல்லூரிகளை வட மாநிலத்தவர்களே ஆக்கிரமிக்கும் நிலை ஏற்படும்…

இல்லையேல் நீட் தேர்வு முடிவு அடிப்படையிலேயே கலந்தாய்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.