சென்னை,

மிழக அரசியல் குறித்து அவ்வப்போது டுவிட்களை தட்டிவிடும் கமலஹாசன், நேற்றைய டுவிட்டில், நாட்டுக்கு உழைப்பவர்களை கேலி செய்ய வேண்டாம் என்று டுவிட் செய்துள்ளார்.

அழுகாமல், ஓடி ஒளியாமல் புரட்சிக்கு தயாராகுமாறு, நடிகர் கமல்ஹாசன் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று நடைபெற்ற முரசொலி பவள விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கமல், தற்காப்பு முக்கியமல்ல, தன்மானம்தான் முக்கியம் என்று பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இரவு டுவிட்டரில், , விம்மாமல், பம்மாமல் ஆவன செய், புரட்சியின் வித்து தனிச்சிந்தனையே என்று குறிப்பிட்டுள்ளார்.

ஓடி எனைப் பின் தள்ளாதே என்றும், களைத்து என்னை தாமதிக்காதே என்றும்,   கூடி நடந்தால் வெல்வது நானில்லை, நாம் என்றும் பதிவிட்டுள்ள கமல்ஹாசன், நாட்டிற்கு ஊழியம் செய்வோரை கேலி செய்யாதே என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மூப்பெய்தி மாளும் முன் சுதந்திரம் மற்றும் தேசியத்தை பழக வேண்டும் என்றும் நடிகர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளார்.

கமலின் டுவிட் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.