திமுக அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள்… திவாகரன், தினகரன் மாறுபட்ட கருத்து

Must read


சென்னை: சென்னையில் நாளை திமுக நடைபெறும் அனைத்து கட்சிக் கூட்டத்தில் அதிமுக எம்.எல்.ஏக்கள் பங்கேற்பது குறித்து டி.டி.வி. தினகரன் மற்றும் திவாகரன் ஆகியோர் மாறுபட்ட கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலாவின் தம்பி திவாகரன், “நீட் தேர்வு குறித்து திமுக நாளை நடத்தும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் நான் கலந்துகொள்ள மாட்டேன். ஆனால், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கலந்துகொள்வார்கள்” என்று தெரிவித்தார்.
அவருடைய கருத்து,  இதுவரை எதிரெதிராக அரசியல் செய்து வந்த  திமுகவும் அதிமுகவும் ஒன்று சேருகிறதோ  என்ற யூகத்தை சமூகவலைதளங்களில் பலரும் வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

திவாகரனின் அறிவிப்பு அதிமுகவுக்குள்ளும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பெரம்பலூரில் கட்சி நிர்வாகி குடும்பத்தின் திருமண விழாவில் கலந்துகொண்ட தினகரன் வேறு விதத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர், “நாளை நடைபெறும் திமுக அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக தொண்டர்கள் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவித்தார். மேலும் திவாகரனின் கருத்து அவரது தனிப்பட்ட கருத்து என்றும் தெரிவித்தார்.

 

More articles

Latest article