
‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘அச்சம் என்பது மடமையடா’ ஆகிய படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக கௌதம் வாசுதேவ் மேனனுடன் கைகோர்த்துள்ளார் சிம்பு .
இப்படத்திற்கு ‘நதிகளிலே நீராடும் சூரியன்’ எனப் பெயரிட்டு பின் ‘வெந்து தணிந்தது காடு’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இப்படத்தை வேல்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். பாடலாசிரியராக தாமரை பணிபுரிந்து வந்தார். நடிகை ராதிகா, இப்படத்தில் சிம்புவின் தாயாராக நடிக்கிறார். சிம்புவுக்கு ஜோடியாக இளம் நடிகை கயாடு லோகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மும்பையில் நடக்கிறது. இதற்காக சிம்பு, கௌதம் உள்ளிட்ட படக்குழுவினர் மும்பை சென்றுள்ளனர். மும்பை ஷெட்யூல்டுடன் படத்தின் பெரும்பகுதி படமாக்கப்பட்டுவிடும் என படக்குழு கூறியுள்ளது.
இந்நிலையில், ‘வெந்து தணிந்தது காடு’ படத்தின் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தில் நடிங்கர் சிம்புவுக்கு வில்லனாக பிரபல மலையாள நடிகர் நீரஜ் மாதவ் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
[youtube-feed feed=1]