தமிழில் அஜித் ஜோடியாக உன்னைத்தேடி படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் மாளவிகா.

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை குறைத்த மாளவிகா கர்ப்பமானதும் சினிமாவை விட்டு விலகினார். தற்போது 12 ஆண்டுகள் கழித்து மீண்டும் நடிக்க வந்துள்ளார்.

ஜீவா, சிவா நடிக்கும் கோல்மால் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இப்படத்தை ஜாகுவார் ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் ஜெயின் மற்றும் நரேஷ் ஜெயின் தயாரிக்க உள்ளனர். பிரபல கன்னட இயக்குனர் பொன் குமார் இப்படத்தை இயக்க உள்ளார். அவர் இயக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.