இந்திய திரையுலகின் ஆகச் சிறந்த கலைஞனான உலகநாயகன் கமல்ஹாசன் அடுத்ததாக விக்ரம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் விக்ரம் திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார்.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கமல்ஹாசன் தனது KH-ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தை அறிமுகம் செய்த நிலையில் தற்போது ஹவுஸ் ஆஃப் கதர் நிறுவனத்தின் தொடக்கத்திற்கான முன்னோட்டமாக புதிய வீடியோ வெளியானது.

இந்த ஆடைகள் அனைத்தையும் அமிர்தா ராம் வடிவமைத்துள்ளார். முன்னணி ஒளிப்பதிவாளர் ரத்னவேலு இந்த வீடியோவை இயக்கி ஒளிப்பதிவு செய்துள்ளார் .