பனாரஸ்:

ந்தியாவின் பார்வையில்  வரலாற்றை மீண்டும் எழுத வேண்டும் என்று வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா கோரிக்கை வைத்தார். 1857 ஆம் ஆண்டு கிளர்ச்சியைத்தான்  முதல் சுதந்திரப் போர் என்று  வீர் சாவர்கர் அழைத்ததாகவும்  கூறினார்.

வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் குப்த்வான்ஷக்-வீர்,  ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யா குறித்து இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு நடைபெறுகிறது. இந்த கருத்தரங்கை தொடங்கி வைத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்புரை ஆற்றினார்.

அப்போது, புகழ்பெற்ற வரலாற்றாசிரியர்களைப் பற்றி குறிப்பிட்டவர், “இந்திய வரலாற்றை இந்தியாவின் பார்வையில் ஆனால் யாரையும் குறை கூறாமல் இருந்து மீண்டும் எழுத வேண்டிய அவசியம் உள்ளது, என்று கூறியவர்,  “நமது நாட்டிடின் வரலாற்றை எழுதுவது நமது  பொறுப்பு. நாம்  எவ்வளவு காலம் பிரிட்டிஷாரைக் குறை கூறிக்கொண்டு இருக்கப் போகிறோம் என்றவர்,  இது குறித்து நாம் யாரையும் விமர்சிக்கப் போவதில்லை,  உண்மை என்ன என்பதை மட்டும் எழுதுங்கள், அது காலத்தின் சோதனையாக நிற்கும்” என்று கூறினார்.

ஆவணங்கள் இல்லாததால் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்யாவின் பங்களிப்புகள் மற்றும் வீரம் குறித்து இன்றைய தலைமுறை அறிந்திருக்கவில்லை என்று ஷா வருத்தம் தெரிவித்தவர், வீர் சாவர்க்கருக்கு இல்லாதிருந்தால், 1857 இல் நடந்த முதல் சுதந்திரப் போர் ஒரு கிளர்ச்சியாக கருதப்பட்டிருக்கும் என்றார்.

(1857-ம் ஆண்டு பிரிட்டிஷாருக்கு எதிராக நடைபெற்ற பெரும் புரட்சியை இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் என்று இந்திய வரலாற்று அறிஞர்கள் அழைத்தனர், இதுவே சிப்பாய்க் கிளர்ச்சி என்றும் அழைக்கப்பட்டது)

அப்போது, வீர் சாவர்க்கர்  இல்லாதிருந்தால், 1857 கிராந்தி (போர்) வரலாற்றாக மாறியிருக்காது,  என்றவர்,  “1857 கிராந்திக்கு ‘முதல் சுதந்திரப் போர்’ என்ற பெயரைக் கொடுத்தது சாவர்க்கர் தான், இல்லையெனில், எங்கள் குழந்தைகள் இதை ஒரு கிளர்ச்சியாக அறிந்திருப்பார்கள்,” என்று அவர் கூறினார்.

தொடர்ந்து நாட்டின்  எதிர்காலம் குறித்து பேசியவர்,  இந்தியாவுக்கு உலக நாடுகளிடையே மீண்டும் மீண்டும் மரியாதை பெறச் செய்ததற்காக பிரதமர் நரேந்திர மோடியைப் பாராட்டும் வாய்ப்பு தனக்கு கிட்டியதாகவும், பாஜக ஆட்சியில்தான், இந்திய நாட்டின் மீதான  மரியாதை அதிகரித்துள்ளது. உலகம் அனைத்தும் இந்தியா மீது  கவனம் செலுத்துகிறது. சர்வதேச முன்னேற்றங்கள் குறித்து நமது பிரதமர் பேசும்போது உலகம் கேட்கிறது”.

இவ்வாறு அமித்ஷா கூறினார்.