சென்னை: வாகனங்கள் வாங்க வங்கிகளின் வாங்கிய கடனை செலுத்த அவகாசம் வேண்டும என சென்னையில் கால்டாக்சி ஓட்டுநகர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்.

கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஊரடங்கால் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தால், கால்டாக்சிகள் ஓட்ட முடியாத நிலை உள்ளது. இதனால், அவர்களின் வாழ்க்கையே கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில்,  நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று வாகனங்களை வாங்கிய ஓட்டுநர்கள், அதை செலுத்த முடியாத நிலை  ஏற்பட்டுள்ளது. இதனால்,   நிதி நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய மாதாந்திர தவணைத் தொகையை நீட்டிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி கால்டாக்சி ஓட்டுநர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, சாலை போக்குவரத்து சம்மேளனம் சார்பில் வியாழனன்று  சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்  நூற்றுக்கணக்கான கால்டாக்கி ஓட்டுநர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து பேசிய மாநில உதவித்தலைவர் பி.பாலகிருஷ்ணன்,  கொரோனா ஊரடங்கு காரணமாக, 2020 நவம்பருக்கு பின் வாகனங்கள் ஓடத் துவங்கினாலும் முழுமையாக பயணிகளுடன் இயங்கவில்லை. ஏற்கனவே நீட்டிக்கப்பட்ட கடன் தொகைக்கு கூடுதல் வட்டி நிர்ணயம் செய்யப்பட்டு கடன் தவணையும் அதிகப்படுத்தப் பட்டது. தற்போது கொரோனா இரண்டாவது அலை காரணமாக மீண்டும் 2021 மே 10ஆம் தேதி முதல் தமிழகத்தில் பொதுமுடக்கம் பிறப்பிக்கப்பட்டு வாகனங்கள் இயங்க அனுமதிக்கப்படவில்லை.

இப்படி இருக்கும்போது,  நிதி நிறுவனங்கள் மாதாந்திரத் தவணை செலுத்துவதற்கு நிர்ப்பந்திக்கின்றன. மாதாந்திரத் தவணை செலுத்த தவறினால் வாகனங்களை பறிமுதல் செய்கின்றனர். இதுபோன்ற நடவடிக்கை,  இத்தொழிலை நம்பி உள்ள பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேலும் பறிக்கும் செயலாகும். இதுபோன்ற செயல்களை நடுக்கவும்,  பல்லாயிரக்கணக்கானோரின் தொழிலையும், குடும்பத்தையும் பாதுகாக்க, தவணையை செலுத்த மேலும்  ஆறு மாத காலத்திற்கு விதிவிலக்கு  அளிப்பதுதான் ஒரே தீர்வாகும்.து

மத்திய அரசும், ரிசர்வ் வங்கியும் வாகனங்களுக்கு மாதாந்திர தவணைத்தொகையை செலுத்துவதை தள்ளி வைக்க நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிடக்கோரி நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு சிஐடியு  தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு சாலை போக்குவரத்து சம்மேளனத் தலைவர் கே.ஆறுமுகநயினார் பேசும்போது,  வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் கடன் நிறுவனங்களிடம் நிதிபெற்று சிறிய மூலதனத்துடன் சுயதொழில் என்கிற பெயரில் கால் டாக்சி தொழில் செய்து வருகின்றனர். சம்பாதிக்கும் தொகையில் சுமார் 60 விழுக்காடு இஎம்ஐ செலுத்த வேண்டியுள்ளது. மேலும் தவணை காலத்திற்கு வட்டியுடன் கடன்தொகையை வசூலிக்கவும் செய்தன.

ஏற்கனவே கொரோனா பொதுமுடக்கம் காரணமாக  இந்த தொழில் முடங்கியுள்ள சூழலில் தவணைத் தொகையை வட்டியுடன் செலுத்த வேண்டும் என நிதி நிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வருகின்றன. சில நிறுவனங்கள் அபராதத்துடன் தவணையை செலுத்த முடியாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யும் அவலமும் நடந்து வருகிறது. எனவே நாட்டில் சகஜநிலை திரும்பும் வரை தவணை செலுத்த விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய நிதி அமைச்சர், பிரதமர், முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது என்று கூறினார்.