டில்லி:

நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்தை கைவிட ஜெம் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிடவில்லை என்று ஜெம் நிறுவன அதிகாரி கூறி உள்ளார். மேலும், இந்த திட்டத்திற்காக ஏராளமான அளவில் பணம் செலவழிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், மத்திய அரசிடம் வேறு இடம் ஒதுக்கக்கோரியும் வலியுறுத்தி வருவதாக கூறினார்.

மேலும், நாங்கள் ஹைட்ரோ கார்பன் எடுக்க தயாராக இருப்பதாகவும், மத்திய மாநில அரசுகள் ஆதரவு அளித்தால் எந்த ,டத்தலும் திட்டத்தை நிறைவேற்ற தயாராக இருப்பதாகவும் கூறி உள்ளார்.

ஓஎன்ஜிசியிடம் இருந்து திட்டத்தை மாற்ற கோரி  பலமுறை அரசுகளுக்க கடிதம் எழுதியும் பதில் வரவில்லை என்றும்,  ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் சுற்றுச்சூழல்  பாதிக்காது என்றும் கூறினார்.

 

டந்த வருடம் மார்ச் மாதம், மத்திய அரசு-ஜெம் நிறுவனம் நடுவே உருவான ஒப்பந்தம் அடிப்படையில் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை துவக்க ஆயத்த பணிகள் நடந்தன. ஆனால், சுற்றுச்சூழல் பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து பெரும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த நிலையில் தமிழக அரசு இத்திட்டத்திற்கு அனுமதி தரவில்லை. கடந்த ஒருவடமாக நெடுவாசல் மக்கள் தொடர்ந்து வரும் போராட்டம் காரணமாக ஹைட்ரோ கார்பன் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.