சென்னை: உலக நாடுகளை புரட்டிப்போட்ட, கொரோனா எனப்படும் பெருந்தொற்றின் தாக்குதலுக்கு, கடந்த 2020ம் ஆண்டு மார்ச் முதல் 2022ம் ஆண்டு மார்ச்சு மாதத்திற்கும் இடையில் கோவிட் 19 இலிருந்து மீண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட 6% பேர் ஜூலை 2023 க்குள் இறந்துவிட்டனர் என்று தமிழ்நாடு சுகாதாரத் துறை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலக சுகாதார அமைப்பு (WHO) கோவிட் -19 ஐ ஒரு பெருந்தொற்றுநோயாக கடந்த 2020ம் ஆண்டு அறிவித்துது. முன்னதாக 2019ம் ஆண்டு இறுதியில், சீனாவுன் வுகான் மாகாணத்தில் உள்ள ஒரு ஆய்வகத்தில் இருந்து இந்த பெருந்தொற்று பரவியதாக கூறப்பட்டது. இதை சீன அரசு மறுத்தாலும், அமெரிக்க உள்பட சில நாடுகள் ஆய்வு செய்து, கொரோனா சீனாவில் இருந்துதான் பரவியது என உறுதி செய்தன.
இந்த தொற்றை, பெருந்தொற்று என உலக சுகாதார அமைப்பு அறிவித்ததுடன், அதை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகைள மேற்கொண்டது. இந்த கோவிட்19 எனப்படும் கொரோனா தொற்று பரவல் சீனா மட்டுமின்றி உலக நாடுகளில் பல பல லட்சக்கண்ககான் மக்களை பலிகொண்டதுடன், சுமார் இரண்டு ஆண்டுகள் உலக பொருளாதாரத்தையே புரட்டிப்போட்டது.
இந்தியாவில் 45 மில்லியன் கோவிட் நோய்த்தொற்றுகள் மற்றும் 533,295 இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன, ஆனால் உண்மை யான எண்ணிக்கை பல மடங்கு அதிகமாக இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். கோவிட் நெருக்கடியின் உச்சக்கட்டத்தின் போது பல மருத்துவமனைகள் படுக்கைகள் இல்லாமல் ஓடின, மேலும் பலர் வீட்டிலேயே இறந்தனர்.
ஆனால், உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் கொரோனா தொற்றுநோய் காரணமாக 4.7 மில்லியன் பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என்று மதிப்பிட்டுள்ளது. இது இந்தியாவின் அதிகாரபூர்வ மதிப்பீட்டைக்காட்டிலும் பத்து மடங்கு அதிகம். இந்த எண்ணிக்கை கணக்கிட முறை தவறானது என்று கூறி, இந்திய அரசு இந்த எண்ணிக்கையை நிராகரித்துள்ளது. உண்மையில் எத்தனை இந்தியர்கள் கொரோனா தொற்றுநோயால் இறந்தார்கள் என்பது அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்.
இதற்கிடையில், தொற்று பரவலை கட்டுப்படுத்த இந்தியா உள்பட உலக நாடுகளில் தடுப்பூசி போடப்பட்டது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள் தயாரித்து, உலக நாடுகளுக்கும் விநியோகம் செய்தது. இதனால், சுமார் 2 ஆண்டுகள் உலக மக்களை வாட்டி வதைத்த கோவில் 19 பெருந்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், அதன்பிறகு அவ்வப்போது திடீர் மரணங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக இளைய தலைமுறையினர் அதிகம் பேர் மாரடைப்பு உள்பட பல்வேறு நோய்கள் காரணமாக மரணத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த உயிரிழப்புக்கு கொரோனா தடுப்பூசி காரணம் என்று ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினாலும், மற்றோரு தரப்பினர், ஏற்கனவே கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களே இவ்வாறு திடீர் மரணத்தை சந்தித்து வருகின்றனர் என்றும், இன்னொரு தரப்பினர், இந்த மரணத்துக்கும் கொரோனா தடுப்பூசிக்கும் சம்பந்தம் இல்லை என்றும், கொரோனா காலகட்டத்தில் பெரும்பாலானோர் வாழ்வியல் முறை மாறிவிட்டது, அதுவே இதுபோல திடீர் மரணத்துக்கு காரணம் என கூறி வருகின்றனர். இருந்தாலும் இந்த விவகாரம், இந்தியா உள்பட நாடு முழுவதும் விவாதப்பொருளாகி உள்ளது.
இந்தியாவில், கொரோனா தொற்றுக்கு பிறகு ஏற்பட்டு வரும் திடீர் மரணங்கள் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆராய்ச்சியில், கோவிட்-19 தடுப்பூசி “விவரிக்கப்படாத திடீர் மரணங்களுக்கு” பின்னால் இருந்தது என்பதற்குஎந்த ஆதாரமும் இல்லை என்று இந்திய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் தீவிர உடற்பயிற்சி ஆகியவை ஆபத்து காரணிகள் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்து உள்ளது. இந்நிறுவனம், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் முதல் 2023ம் ஆண்டு மார்ச் வரை நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாகவும், இந்த ஆய்வுக்கு 18 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடம் ஆய்வு நடத்தியதாக தெரிவித்து உள்ளது.
இதுதொடர்பாக “ஆரோக்கியமான பெரியவர்களிடையே திடீர் விவரிக்கப்படாத மரணங்கள் பற்றிய நிகழ்வு அறிக்கைகள்” என்று அறிக்கையை வெளியிட்டது. இதில், 29,171 திடீர் மரணங்களை அடையாளம் கண்டுள்ளதாகவும், மற்றும் 729 கொரோனா வழக்குகள் மற்றும் 2,916 “கட்டுப்பாட்டு” பாடங்களின் பதிவுகளை ஆய்வு செய்ததாக குழு தெரிவித்துள்ளது.
பலரது திடீர் மரணத்திற்கு, அவரர்களத குடும்ப வரலாறு காரணம் என்றும், , COVID-19 க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது மற்றும் சமீபத்திய அதிகப்படியான குடிப்பழக்கம் மற்றும் தீவிரமான உடல் செயல்பாடு போன்ற வாழ்க்கை முறை நடத்தைகள், கோவிட்-19 இலிருந்து குணமடைந்த ஐந்து நோயாளிகளில் ஒருவருக்கு பசியின்மை மற்றும் தொடர்ச்சியான சோர்வு போன்ற கோவிட்-க்குப் பின் தொடர்ந்து அறிகுறிகள் இருப்பதாகவும் விவரிக்கப்படாத திடீர் மரணத்திற்கான ஆபத்து காரணிகள் என்று குறிப்பிட்டு உள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு சுகாதாரத்துறை மேற்கொண்ட ஆய்வில், மார்ச் 2020 முதல் மார்ச் 2022 வரை கோவிட் 19 நோயிலிருந்து மீண்ட நோயாளிகளில் கிட்டத்தட்ட 6% பேர் ஜூலை 2023க்குள் இறந்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதாவது 6 சதவிகிதம் பேர் இறந்துள்ளனர் என்றும், இந்த 6% இறப்புகளில், 20% 61-80 வயதுக்குட்பட்டவர்கள் மற்றும் 1% க்கும் குறைவானவர்கள் 40 வயதுக்குட்பட்டவர்கள்.
கொரோனா நோய் தாக்குதலில் இருந்து மீண்டவர்கள், பசியின்மை மற்றும் தொடர்ச்சியான சோர்வு போன்ற பாதிப்புகளுக்கு ஆட்பட்டுள்ளதாகவும், 87% நோயாளிகள் தொடை எலும்பின் அவஸ்குலர் நெக்ரோசிஸ் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளனர் என்றும் தெரிவித்து உள்ளது.
அதாவது 6 சதவிகிதம் பேர் இறந்துள்ளனர் என்றும், 87% நோயாளிகள் COVID-ஐ கடந்த தொடை எலும்பின் அவஸ்குலர் நெக்ரோசிஸை உருவாக்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
6% இறப்புகளில், 20% பேர் 61-80 வயதுக்குட்பட்டவர்கள் என்றும், 40 வயதுக்குட்பட்டவர்கள் 1% க்கும் குறைவானவர்கள் என்றும் தெரிவித்துள்ளது.