டெல்லி,

இந்தியாவிலிருந்து நேபாளத்துக்கு ஆண்டுதோறும் 1.3 மில்லியன் டன் பெட்ரோலிய உற்பத்திப் பொருள்களை ஏற்றுமதி செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 1974 ம் ஆண்டுமுதல் இந்த ஒப்பந்தம் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

இதுசம்பந்தமாக செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்தியாவுக்கும் நேபாளத்துக்கும் இடையே குழாய்கள் பதிப்பதற்கான ஆரம்பக்கட்ட  பணிகள் முடிந்துவிட்டதாகவும்  குழாய்களை இணைக்கும் பணிகள்தான் எஞ்சியிருப்பதாகவும் கூறினார்.

2014 ம் ஆண்டு நேபாளம் சென்ற பிரதமர் மோடி அங்குள்ள நாடாளுமன்றத்தில் பேசினார். அப்போது அவர், Raxaul-Amlekhganj இடையில் பெட்ரோலிய குழாய்கள் பதிக்கும் திட்டத்துக்கு உறுதி அளித்தார் என்றும் அமைச்சர்  தெரிவித்தார்.

பின்னர் பேசிய ஐ ஓ சி தலைவர் அசோக், இந்த ஒப்பந்தத்தின் காலம் மார்ச் 2022 வரை இருக்கும். தற்போது டிரக்குகள் மூலம் பெட்ரோலிய எரிபொருள் நேபாளத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது, இனி பாட்னா – மோட்டிஹரி – அம்லக்காஞ்ச் ஆகிய இடங்களுக்கு இடையே குழாய்கள் பதிக்கப்பட்டு பெட்ரோலிய எரி பொருள் நேபாளத்துக்கு அனுப்பப் படவிருப்பதாக தெரிவித்தார்.